Puttalam Online
current

வருமுன் காப்போம் டெங்கு ஒழிப்பு விஷேட வேலை திட்டம்

  • 5 July 2018
  • 176 views

ரூஸி சனூன்  புத்தளம்

வருமுன் காப்போம் டெங்கு ஒழிப்பு விஷேட அதிரடி வேலை திட்டம் கடந்த வார இறுதியில் புத்தளம் ஐந்தாம்   வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டது. புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வழிகாட்டலில் புத்தளம் நகர சபையின் டெங்கு ஒழிப்பு விஷேட அதிரடி படை இந்த செயல்திட்டத்தில் அதிரடியாக இறங்கி இத்திட்டத்தினை முன்னெடுத்தது.

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மலேரியா தடுப்பு பிரிவு மற்றும் புத்தளம் பொலிஸாரும் இந்த டெங்கு ஒழிப்பு விஷேட அதிரடி வேலை திட்டத்தில் பங்காளிகளாக இணைந்து கொண்டனர்.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் களத்தில் நின்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்ததோடு நகர சபை உறுப்பினர்கள் எம்.எஸ்.எம். ரபீக், பர்வீன் ராஜா உள்ளிட்டவர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

குறித்த இந்த ஐந்தாம் வட்டாரத்தில் கடந்த காலத்தில் டெங்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்த புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், அண்மையில் புத்தளத்தில் பெய்த மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் மீண்டும் டெங்கு நுளம்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் இந்த வருமுன் காக்கும் திட்டத்தினை ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.

ஐந்தாம் வட்டாரத்தின் சகல வீடுகளுக்கும் சென்ற அதிகாரிகள் பொது மக்களுக்கு டெங்கின் தாக்கம் பற்றி தெளிவு படுத்தினர். டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் பல இதன் போது கண்டு பிடிக்கப்பட்டு அவைகள் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All