Puttalam Online
regional-news

சாஹிராவின் மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு

  • 5 July 2018
  • 406 views

2018 இவ்வருடத்திற்கான மாகாண மட்டத்திலான விளையாட்டு போட்டிகள் (Provincial Meet) இம்மாதம் July 3,4,5 மற்றும் 6 ஆகிய தொடர் 4 நாட்களை உள்ளடக்கியதாக வென்னப்புவையில் அமைந்துள்ள Sir Albert F Peris விளையாட்டு அரங்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டிகளில் நேற்றைய (2018-07-04) போட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற உயரம் பாய்தல் (High Jump) போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் A.M.Afrid மூன்றாம் ️இடத்தை சுவீகரித்துள்ளார். மேலும் இவ்வெற்றியின் மூலம் இவர் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டியிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் முதலாம் இடத்தை பெறக்கூடிய திறமைகளை உடையவராக இருந்த போதிலும் இரு காரணங்களுக்காக அவரின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்பட்டது.

கடந்த நோன்பு காலங்களில் அவரால் உரிய முறையில் பயிற்சிகளில் ஈடுபடமுடியாமையும்,
இவர் உயரம் பாய்தல் போட்டிகளுக்கு பயன்படுத்தும் பிரத்யேகமான காலணி சேதமடைந்து அதை அணியமுடியாமல் இருந்தமையினால் வேறு காலணியை பயன்படுத்திய போதிலும் அது உரியமுறையில் உபயோகிக்கமுடியாமல் இருந்தமையுமே பின்னடைவிற்கு காரணமாகும்.

இவர் வழமையாக கடக்கும் உயரம் பாய்தலின் உயரமானது 1.94 M ஆகும். இம்முறை 1.90 M இணை கடக்கமுடியாமல் போனமையினால் மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றது. மென்மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டு முதலாம் இடத்தை அடைவதற்கான முயற்சிகளில் மாணவர் A.M.Afrid தற்போது இட்டுப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வருடம் 2017 மாகாணமட்ட போட்டியில் முதல் ️இடம்பெற்று அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளி ️பதக்கத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து,
நேற்று (2018-07-04) நடைபெற்ற மற்றுமிரு போட்டிகளான ஈட்டி எறிதல் (Javelin) மற்றும் பரிதிவட்டம் எறிதல் (Discus throw) போட்டிகளில் கலந்துகொண்ட புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் M.M.Sifkhan பரிதிவட்டம் எறிதல் போட்டியில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார். இவரும் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டியிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சியான விடயமாகும்.

இம்மாணவரும் கடந்த வருடம் 2017 மாகாணமட்ட குண்டெறிதல் (Putt Shot) போட்டியில் மூன்றாம் ️இடத்தைப்பெற்று அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்துசிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களான புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் A.M.Afrid மற்றும் மாணவன் M.M.Sifkhan ஆகியோருக்கு எமது பாராட்டுகளையும் தேசிய மட்டத்தில் நடைபெற உள்ள விளையாட்டுப்போட்டியில் முதலாமிடம் வருவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்,

இவர்களை ஊக்கிவித்த பெற்றாருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இவர்களை ஆரம்பம் முதல் பயிற்றுவித்து ஒவ்வொரு முறையும் அகில இலங்கை மட்டம் வரை வழிநடாத்தி செல்லும் பகுதிதலைவர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் Mr. M.F.M. Thufail அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Zahira Media
Follow us on our facebook for more updates: https://www.facebook.com/zahiraputtalam

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All