Puttalam Online
star-person

திரு. வைரையா இராமச்சந்திரன் – 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வூ பெற்றார்

  • 5 July 2018
  • 160 views

(க.மகாதேவன்-உடப்பு)

ஆண்டிமுனை உடப்பைச் சேர்ந்த திரு. வைரையா இராமச்சந்திரன் அவர்கள் தனது 41 வருட ஆசிரிய சேவையிலிருந்து அண்மையில் ஓய்வூ பெற்றுள்ளார். இவர் திரு.சின்னத்தம்பி வைரையா திருமதி.காலாயி தம்பதிகளின் புதல்வராவார்.

தனது ஆரம்பக்கல்வியை பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சிலா/நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

03.06.1977ம் ஆண்டு கணித/விஞ்ஞான உதவி ஆசிரியராக பு/கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று மூன்றரை ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் யாழ் /பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 11.01.1981 தொடக்கம் 30.06.1982 வரை விஞ்ஞான பாடத்தில் பயிற்சியைப் பெற்று பின் 01.07.1982 தொடக்கம் 19.05.1986 வரை கொஃதெமட்டக்கொட விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

20.05.1986முதல் 12.02.2006 வரை பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் 13.02.2006 முதல் 23.07.2007 வரை பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் 24.07.2007முதல் 23.07.2008 வரை தேசிய கல்வி நிறுவகத்தின் கிளை நிறுவனமான மீப்பேயில் அமைந்துள்ள கல்வியலாளர்களின் வாண்மை விருத்தி நிலையத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பாடநெறியை மேற்கொண்டுள்ளார்.

24.07.2008முதல் 30.06.2009 வரை மீண்டும் பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றி பின் 01.07.2009 முதல் 20.06.2018 இல் தான் ஓய்வு பெறும் வரை புத்தளம் வடக்குக் கல்விக் கோட்டத்தில் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கல்விமாணிப் பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார்.

அத்துடன் அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழி(தமிழ்)யைப் போதிக்கும் போதனாசிரியராகவும் திகழ்கின்றார். விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவா்களை ஈடுபடுத்துவதிலும் முன்னின்று செயலாற்றியுள்ளார்.

விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றிய காலத்தில் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் செயலமர்வுகளை நடாத்துவதிலும் களச்சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து செயற்படுத்துவதிலும் தனது பங்களிப்புக்களை வழங்கியூள்ளதுடன் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்துவதிலும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All