Puttalam Online
art-culture

போதை

  • 11 July 2018
  • 122 views

உலக உருண்டையின்
இதய நோய்..

உருப்படாதோர் சங்கத்தின்
உற்பத்தி சாலை..

தனக்குத் தான் செய்யும்
தவறின் தற்கொலை..

தீயிற்குத் தின்னக்கொடுக்கும்
உடல் விறகு..

காம்போடு கருகி விழும்
ரோஜா தோட்டம்…

மாணவர்களின்
மரணப் பொதி…

பறக்கும் முன்னே சிறகெரியும்
சிறார் உலகு..

நரம்பு மண்டலத்தில்
நாய்கள் வீசும்
கிருமித் துகள்…

பொண்ணையன்
தொழில்..!

போலீசின்
வருமானம்..!!

நாகரீக முலாமிட்ட
நச்சுப் புகை..

பிணத்தை விற்று
மலத்தை உண்ணும்
மலட்டு வியாபாரிகள்..

உயிர் குடிக்கும்
வில்லை…

உருக்குலைந்த
தாலி..

விவாகரத்தின்
விசும்பல்…

பலர்
கண்ணீரில் முளைத்த
காசு…

திருட்டு மரத்தின்
ஆணிவேர்…

சிறுவர் துஷ்ப்பிரயோகத்தின்
இருட்டறை..

*

சிவில் சமூகம்
சிவக்காத வரை – இந்த
சீர்கேடு நகரா…!!

தாய்மை உணர்வோடு
இதயம்
தட்டுங்கள்..!!

தட்டித் திறக்காதவை
உடைக்கப்
புறப்படுங்கள்..!!

—–
புத்தளம் மரிக்கார்
11-07-2018


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All