Puttalam Online
international-affairs

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம்: மு.க. ஸ்டாலின்

  • 28 July 2018
  • 224 views

மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல் நலம் குறித்து விஷமிகள் பரப்பும் செய்திகள் எதையும் தி.மு.கவினரும் அவரது உடல் நலனில் அக்கறை கொண்டு விசாரித்துவரும் மாற்றுக்கட்சியினரும் நம்ப வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், “அவருக்கு அளிக்கப்பட்டுவரும் தொடர் சிகிச்சைகளின் காரணமாக, அவரது உடல்நலன் மேம்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரைக் கவனித்துவருகின்றனர். விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளுக்கு செவிமெடுக்க வேண்டாம். அவற்றை நம்பவும் வேண்டாம்” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “அவருக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது. நோய்த் தொற்றும் குறைந்திருக்கிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தியில், ‘தலைவருக்கு மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் விரைவில் குணமடைந்து, எல்லோருக்கும் அவரே நன்றி சொல்வார்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All