Puttalam Online
current

உம்மு நஸ்ரின் மன்றத்தின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை

  • 29 July 2018
  • 742 views

மர்ஹூமா உம்மு நஸ்ரின் மன்றத்தின் ஏற்பாட்டில் Thinkers & Achievers எனும் தலைப்பிலான பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (28-07-2018) புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடந்து முடிந்தது.

இந்நிகழ்விற்கான வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் , முகாமைத்துவ மற்றும் முயற்சியாண்மை ஆலோசகருமான F.H.A.ஷிப்லி (BBA , MSc) பங்குக்கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்விலே வர்த்தக முயற்சிகள் , புத்தளத்திலுள்ள வர்த்தக வாய்ப்ப்புக்கள் , இலங்கை எதிர்நோக்கும் வர்த்தக சவால்கள் , Start-up வியாபார முயற்சிகள் , வட்டி மற்றும் நுண்கடன் விடயங்கள் , புத்தளத்திற்கான ஒரு வர்த்தக கட்டமைப்பின் அவசியம் என்பவைகள் பற்றிய விளக்கங்களும் , கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.

இந்நிகழ்வின் வரவேற்புரையை மர்ஹூமா உம்மு நஸ்ரின் மன்றத்தின் ஸ்தாபகரும் , சட்டத்தரணியுமான M.H.முஹம்மத் நிகழ்த்தினார்.

நன்றியுரையை புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் முகாமையாளரும் , மர்ஹூமா உம்மு நஸ்ரின் அவர்களது சகோதரியுமான சமூக ஆர்வலர் சகோதரி நஷ்லியா காதர் நிகழ்த்தினார்.

பங்காளர்களாக 50 நபர்கள் கலந்துக்கொண்ட இந்த அமர்வின் நிகழ்வுகளை , தனக்கேயுரிய தனித்துவத்தோடு சமூக ஆர்வலர் ஹிஷாம் ஹுசைன் தொகுத்து வழங்கியதோடு , நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக புத்தளத்திற்கான வர்த்தக கட்டமைப்பு ஒன்றின் அவசியம் தொடர்பிலான விளக்கம் உணர்த்தப்பட்டது. அதனை சரிவர உணர்ந்த வருகை தந்த வர்த்தகர்களும் , அதற்கான பச்சைக்கொடியை காட்டியிருப்பதும் , இதனது இரண்டாம் கட்ட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான விடயமாகும்.

விரைவில் வர்த்தக அமைப்பொன்று உருவாகும் எனும் நம்பிக்கையோடு , இந்த நிகழ்வுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மர்ஹூமா உம்மு நஸ்ரின் மன்றம் சார்பாக நன்றிகளை தெரிவிக்கிறோம்.

– ஏற்பாட்டுக்குழு.-

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All