Puttalam Online
historical-notes

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கம் – (பகுதி 1)

  • 4 August 2018
  • 185 views

(நஸ்லியா காதர்)
 .
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கம் என்றழைக்கப்படும் இதன் காரியாலயம் புத்தளம் – மன்னார் பாதை, 2ம் மைலில் அமைந்திருக்கின்றது 2000 ஆம் ஆண்டு Society Ordinance இற்கு கீழே பதியப்பட்டது இது ஒரு சங்கமாக பதியப்பட்டுள்ளது.
 .
Saltern yard என அழைக்கப்படும் இதன் எல்லை வரையறைக்குள் காணப்படும் வாய்க்கால் உரிமையாளர்கள் இதன் அங்கத்தவர்களாக சேரலாம். அதன்படி அங்கத்தவர் ஒருவர் சட்டரீதியான ஆவணத்தை வழங்கியே தனது காணியின் உரிமையை உறுதிப்படுத்தல் வேண்டும். அது காணி உறுதி (deed) ஆக அல்லது ஆண்டு அனுமதி பத்திரம் (annual permit) ஆக இருக்கலாம். இந்த ஆண்டு அனுமதி பத்திரம் அரச காணிகளில் உப்பு உற்பத்தியை மேற்கொள்வோருக்கு பிரதேச செயலகத்தால் ஆண்டு தோறும் வழங்கப்படுவதாகும். தற்போது ஏக்கர் ஒன்றுக்கு LKR 7,500/- படி இது அறவிடப்படுகின்றது.
.
சீட்டு காணிகள் எனப்படும் போது அது சின்னக்கரை ஒப்புகள் எனப்படும் பழமையான, பாரம்பரியமான உறுதிகள் ஆகும். இவை 100 வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்துக்குரியவை. சில வாய்க்கால்களுக்கு ஆட்சி சீட்டு எழுதப்பட்டாலும் அவை ஆண்டு தோறும் பிரதேச செயலகத்தில் பதியப்பட்டு ஆண்டு அனுமதி பத்திரம் பெறப்படும் காணிகளாகவே உள்ளன.
இனி, இந்த saltern (உப்பளம்) yard என நாம் அழைக்கும் சங்க எல்லைக்குட்பட்ட வாய்க்கால்கள் 16 யாகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யாகை எனப்படுவது சிறிய நில தொகுதியாகும். ஒரு ஊர் கிராமங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதை இதற்கு உவமானமாக சொல்லலாம்.
இந்த யாகைகளுக்கான பெயர்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டவை. அவை 1. பசரடி முந்தல் 2. பாலையடிக்குடா 3. பட்டியடிக்குடா 4. கீரி முந்தல் 5 . அரியகுடா மேற்கு 6. அரியகுடா கிழக்கு 7. செங்கல்பிட்டி 8. பொன்னடைஞ்ச குடா 9. உப்படைந்த குடா 10 புதூர் 11. மரியரியாகை 12. பாலந்தீவு 13. பாலந்தீவு தரவை 14. மைல்வெளி 15. முள்ளிப்புரம் 16. பள்ளியடி முந்தல்
 .
ஒவ்வொரு யாகையும் பரப்பில் வித்தியாசமானவை. யாகைகளிலும் 9 தொடக்கம் 30 வாய்க்கால்கள் வரை உள்ளடக்கப்பட்டு உள்ளன. பொதுவாக வாய்க்கால் ஒன்று ஆகக்குறைந்தது 1 ஏக்கர் விஸ்தீரமானது. 3 ஏக்கர்களை கொண்ட ஒரு சில வாய்க்கால்களும் இருக்கலாம். ஒரு வாய்க்காலின் அரைப்பங்கு சிறகு என அழைக்கப்படுகின்றது சங்கத்தின் அங்கத்துவம் பெற குறைந்தது 1/2 ஏக்கரையாவது சொந்தமாக கொண்டிருக்க வேண்டும்.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All