Puttalam Online
international-affairs

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார்

  • 7 August 2018
  • 149 views

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று (07-08-2018) செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94.

சமீப நாட்களாக கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அவரது கோபாலபுரம் வீட்டிலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதால் ஜூலை 27 நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முதுமையால் உண்டான உடல் நலக் குறைவால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து கருணாநிதி விலகி இருந்தார். அதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக 2017இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளமை குறிப்பிடதக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All