Puttalam Online
regional-news

உடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்

  • 15 August 2018
  • 95 views

-க.மகாதேவன்-

உடப்பு ஆண்டிமுனையை இணைக்கும் பிரதான பாதையின் பாலம் அமைக்கும் பிரதான  கட்டுமாணப்  பணிகள் தற்போது ஆரம்பிக்கப்கட்டுள்ளது.

60கோடி ரூபா செலவில் உலக வங்கியின் நிதிஉதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தப்பகுதி அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதுண்டு. இதன் நிமித்தம் அறுவாய் வெட்டப்படுவதுண்டு.

கடந்த காலத்தில் மக்கள் எடுத்த கடும் முயற்சியினால் பாலம் இந்த ஊருக்கு அமைத்துத்தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மூலம் முன்னெடுத்தனர். அதன் பயனாக இன்று அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனலாம். உடப்பி ன் ஒரு மைல் கல் திட்டம் என்பதை இந்த ஊர் மக்கள் அறிவாா்கள் பல தசாப்த காலங்களாக மக்கள் பட்ட கஷ்டத்தின் ஒரு முன்னெடுப்பு என்றே இதை கூற வேண்டும். இதன் மூலம் மக்களின்  போக்குவரத்து கஷ்டங்கள் யாவும் நிறைவடையும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All