Puttalam Online
regional-news

முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் இலவசமாக கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன

  • 7 September 2018
  • 92 views

ரூஸி சனூன்  புத்தளம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் கண்களில் வெள்ளை படர்தல் நோய்க்குள்ளான மூவினத்தையும் சேர்ந்த 35 பேருக்கு இலவசமாக கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லாரின் வேண்டுகோளின் பேரில் அதன் இணை அமைப்பான ப்ரெய்ன் ஹோல்ட் அண்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையோடு இந்த இலவச கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் (27) வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் முஹம்மது இல்முதீன்  நெறிப்படுத்தி இருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All