Puttalam Online
regional-news

பவர் ஒப் செய்னப் வெற்றிக்கிண்ணத்துக்கான விளையாட்டு போட்டி

  • 7 September 2018
  • 249 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் ஐந்தாம் தர மாண்வர்களுக்கிடையில் நடைபெற்ற பவர் ஒப் செய்னப் வெற்றிக்கிண்ணத்துக்கான விளையாட்டு போட்டியில் ஐந்தாம் தர ஈ வகுப்பு மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்காக வேண்டி தொடர்ந்து ஓயாமல் கல்வியில் தம்மை நாட்டம் செலுத்தி சோர்வடைந்து களைத்து போன ஐந்தாம் தர மாணவர்களை புத்தூக்கம் அளிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகத்தினால் இரண்டாவது வருடமாக  இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த போட்டிகள் யாவும் புத்தளம் சைனப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் அதிபர் பெலஜியா அபுல் ஹுதா தலைமையில் புதன்கிழமை (29) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கூம்பு போட்டி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், பந்து மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஐந்தாம் தர ஏழு வகுப்புக்களையும் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

வெற்றிக்கிண்ணத்துக்கான பூரண அனுசரணையினை பெற்றார்களில் ஒருவரான ஏ.டபிள்யூ.எம். அன்ஸாத் வழங்கி இருந்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற ஐந்தாம் தர ஈ வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியை வை.பர்ஸானா சகிதம் பவர் ஒப் செய்னப் வெற்றிக்கிண்ணத்தினை பிரதி அதிபர் லோரேஸ்வரி, பிரதி அதிபர் எஸ்.ஐ.எல். முஸம்மில், போட்டிகுழு செயலாளர் எம்.ஐ.எம்.யூ. ஷியாபா ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All