Puttalam Online
other-news

செயலமர்வு -அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச்சட்டம்

  • 10 September 2018
  • 118 views

(றியாஸ் இஸ்மாயில்)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் பற்றி நீதியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகளிலுள்ள வேறுபாடுகளை கலந்துரையாடி அதனை ஓர் அறிக்கையாக சமர்பிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஓரு நாள் செயலமர்வு இன்று (09.09.2018) கொள்ளுப்பிட்டி மென்டரீனா  ஹோட்டலில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் முன்னாள் தலைவரும் தேசிய விவகாரத்துக்குப் பொறுப்பான தவிசாளருமான  கே.என்.டீன் தலைமையில்  நடைபெற்றது.

இச்செயலமர்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் சஹிட் எம் ரிஸ்மி  பேரவையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி இதன் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவீட் யூசுப் உதவி ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சாபீர் சவாட் பேரவையின் நம்பிக்கையாளர் சபைத்தவிசாளர் எம்.எப்.எஸ்.முஹீத் உட்பட பேரவையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இரண்டாகப்பிரிந்து வெவ்வேறு அறிக்கைகளை கையளித்துள்ளதால் இவ்விரு அறிக்கைகளிலும் உள்ள கருத்து முரண்பாடுகளை  மட்டும் கருத்தில் எடுக்கும் முகமாக இச்செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் திருமணச்சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி சிவில் இயக்கங்கள்  கேட்டுக் கொண்டதற்கிணங்க அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையும்  இதுவிடயமாக அறிக்கை வழங்கியுள்ளது.இதுபோல் 40 அமைப்புக்களும் இது தொடர்பான அறிக்கைகளை வழங்கியுள்ளன.

இச்செயலமர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இது விடயமாக வளவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களிடமிருந்து முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருங்கள் தொடர்பான திறந்த கருத்துப்பரிமாறல்கள் இடம்பெற்றதுடன் ஆலோசனைகளும் பெறப்பட்டன.

இந்நிகழ்வில் உலாமாக்கள் சிரேஷ்ட சட்டத்தரணிகள்  கல்வியலாளர்கள் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெண் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் எனப்பலரும்  கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All