Puttalam Online
current

செய்னப் ஆரம்பப் பாடசலை கண்காட்சியில் கலந்து பயன்பெருமாறு அழைப்பு

  • 24 September 2018
  • 579 views

எழுத்தறிவு மாதத்தினை முன்னிட்டு செய்னப் ஆரம்பப் பாடசலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்காட்சி நிகழ்வுகள் 2018 செப்டம்பர் 25 (செவ்வாய்) மற்றும் 26 (புதன்) ஆகிய இரு தினங்களில் இடம் பெறவுள்ளது.

மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களடங்கிய பதாதைகள் மற்றும் மாணவர்களைக் கவரக்கூடிய ஏனைய வடிவங்களின் மூலம் பாடசாலை சூழல் அலங்கரிக்கப்பட்டு இருப்பதுடன் பல்வர்ண தோரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளில் கலந்துகொன்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்ற இரண்டு பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. முதலாம் தரத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் சான்றிதழ் உரையொன்றும் (Certificate Folder) வழங்கப்படும்.

கண்காட்சி நிகழ்வுகள் நாளை (25) காலை கல்லூரி மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படுவதுடன், ஏனைய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் தமது பெற்றோருடன் சமுகமளித்து பயன்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு – 2018.09.25, செவ்வாய்க்கிழமை – மாலை 4.30 – இரவு 8.30

ஆண்களுக்கு – 2018.09.26, புதன்கிழமை – மாலை 4.30 – இரவு 8.30


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All