Puttalam Online
current

முஹைதீன் ஜும்மா பள்ளியின் 80 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகள்.

  • 28 September 2018
  • 872 views

ஐந்நூறு வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த நம் மண்ணின் அடையாளம், புத்தளம் (முமைதீன் ஜும்மா மஸ்ஜித் ) பெரிய பள்ளி தற்போதய இடத்தில் (புதிய பள்ளி) கட்டி திறக்கப்பட்டு இவ்வருடத்துடன் 80 வருடங்கள் கடக்கின்றது.

1400 களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மீரா உம்மா என்னும் சீமாட்டியால் சுமார் 25 ஏக்கர் நிலம் பள்ளிக்காக வக்பு செய்யப்பட்டு இன்றைய  கொத்துபா பள்ளி மைதானத்தில் “மீரா மக்காம் பள்ளி” என்ற பெயருடன் அன்று ஜும்மா (கொத்துபா) பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்பு 1937 இல் இன்றைய  பெரிய பள்ளி அமமந்துள்ள இடத்தில் இருந்த முகைதீன் தர்கா அகற்றப்பட்டு ஊரின் அக்கால தனவந்தர்களின் பணத்தில் அழகிய பள்ளியாக புத்தளம் பெரிய பள்ளி கட்டப்பட்டது. சுமார் ஒரு வருட கால கட்டுமாண பணிகளைத் தொடர்ந்து 1938.09.21 அன்று புதிய பள்ளி ஊர் தலைவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் புத்தளம் நகரிற்கு வருகை தந்ததோடு வருகை தந்த அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் இவ்வாண்டு எமது பெரிய பள்ளியின் 80 ஆண்டு அகவையை நிமனவு கூறும் முகமாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கட்டமாக பாடசாலை, மத்ரஸா மாணவ மாணவிகள் மற்றும் திறந்த பிரிவு போட்டியாளர் களுக்கான இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளை நடாத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கிராத், அதான் கூறல், இஸ்லாமிய கீதம்,  பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் அரபு எழுத்தனி போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ந டைபெறும்.

கவிதை, கட்டுரை மற்றும் அரபு எழுத்தனி போட்டிகள் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும்.

பாடசாலை பிரிவு போட்டியாளர்கள் பாடசாலை ஊடாக போட்டிகளில் பங்கு கொள்ளலாம். திறந்த பிரிவிற்கு வயதெல்லை கிடையாது.  ஆகவே முன்னைய காலங்களில் மீலாத், பாடசாலை மட்டங்ககளில் தம் திறமைகளைக் காட்டிய மூத்தவர்களுக்கும் இளஞர் யுவதிகளுக்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமுமாகும். திறந்த பிரிவு  போட்இக்கான விண்ணப்பங்களை புத்தளம் பெரிய பள்ளி காரியாலயத்தில் அலுவலக நேரத்தில் (10 am- 2pm & 6pm-10pm) பெற்றுக்பகாள்ளலாம். போட்டி தலைப்புகள் யாவும் பெரிய பள்ளியுடன், அதன் வரலாறு, கட்டிட கலை தொடர்பாக அமைந்துள்ளது.

மேலும் கவிதை, கட்டுரை மற்றும் அரபு எழுத்தணி  போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் ஆக்கங்கள் பள்ளியின் 80 வருட நினைவு மலரில் பெயருடன் பிரசுரிக்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் உண்டு.

பாடசாலை போட்டியாளர்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 28 ஆம் திகதியும் திறந்த பிரிவு போட்டியாளர்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்.

சகோ. சகீன் – 072 227 2859

மௌலவி மூசீன் – 071 625 7457

சகோ.  ரஸ்மி (GS) – 071 800 3071

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All