Puttalam Online
paq-news-bulletin

ஆழமறியாமல் காலைவிடாதே: கத்தாரில் இருந்து வரும் PAQன் செய்தி

  • 29 September 2018
  • 623 views

அறிந்தோ அறியாமலோ புத்தளத்தின் பொருளாதாரத்தில் கத்தாருக்கு பெரிய பகுதி ஒன்று உள்ளது, சுமார் கடந்த 10 வருடத்திற்குள் புத்தளத்தை சேர்ந்த நம்மவர்கள் கத்தாருக்கு கடல்கடந்து படையெடுத்து கை நிறைய சம்பளத்தை பெற்று நம்மூருக்கு அனுப்பிவருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவரைப்பார்த்து “நானும் இவரைப்போல் உழைக்கவேண்டும்” என எண்ணி இருப்பீர்கள், அப்படி நீங்கள்எண்ணியிருந்தால் இந்த செய்தியின் முக்கிய இலக்கு நீங்கள் தான்.

“பாடசாலை முடிந்துவிட்டது, உடனே ஒரு சிறிய பாடநெறியை முடித்துவிட்டு வெளிநாடு சென்று உழைப்போம்” என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். வெளிநாடு பற்றியும், அங்கு இருக்கும் சட்டதிட்டம் பற்றியும், அங்கு வேலை பெறுவதற்கு தகைமைகள் பற்றியும் நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் நிறையவே இருகின்றன.

அவற்றை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காக புத்தளத்தில் பல உதவிகளை செய்யும், கத்தாரில் வாழும் புத்தளம் சகோதர்களின் அமைப்பு (Puttalam Association Qatar – PAQ) உங்களுக்காக விஷேட நிகழ்வு ஒன்றை புத்தளத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி இரவு 7 மணிக்கு) புத்தளம் கலாச்சார மண்டபத்தில் உங்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று (ஆண்கள் மற்றும் பெண்களுக்கான) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த அழகான நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் எதிர்கால வெளிநாட்டு வாழ்க்கையை திறன்பட அமைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வில் உயர்தர பரீட்சையின் பின்பு எவ்வாறான கற்கை நெறிகள் செய்யவேண்டும், எந்த நிறுவனங்களில் செய்ய வேண்டும் என்பது முதல் விசா விபரங்கள் வரை அனைத்தையும் உங்களுக்காக மிக சுவாரஷ்யமான முறையில் ஒரு மணித்தியாலத்தில் சொல்லுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அழகான நிகழ்வில் வெளிநாடு செல்ல ஆர்வம் உடையவர்கள் அல்லது வெளிநாட்டு சுவாரஷ்யமான அனுபவங்களை அறியவிரும்புபவர்கள் அல்லது நம் நாட்டில் சிறப்பான தொழில் பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அல்லது உயர்தர பரீட்சையில் சித்தியடைவது கடினம் என்று எண்ணம்கொள்பவர்கள் அல்லது சாதாரண மற்றும் உயர் தர பரீட்சை எழுதாத சகோதரர்கள் யாராக இருந்தாலும் கலந்துகொள்ளலாம்.

உங்களுக்காக சிறப்பான வழிகாட்டல் நிச்சயம் இந்நிகழ்வில் தரப்படும். தயவு செய்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து உங்கள் பெயரை இந்நிகழ்வுக்காக பதிவு செய்யதுகொள்ளுங்கள்.

GCF Unit, Puttalam Association Qatar
பதிவுகளுக்கு:
நசீர் 0722861857 | ப(f)ஸ்லூர் ரஹ்மான் 0714249815 | கட்டார் +974 66850950 | இஷாம் +97466441447

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All