Puttalam Online
social

ஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்டப்போகிறோம்..?

  • 4 October 2018
  • 485 views

(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

கொழும்பு குப்பைக்கழிவுகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஆறாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தை மெச்சுகின்ற அதேவேளை தொடர்ந்தும் அதே முகங்களையே காணக்கிடைக்கின்றமை எண்ணி எம்மை நாமே நொந்துக்கொள்ள வேண்டியுமிருக்கிறது.

இது வெறும் ஒரு சிலரின் பிரச்சினையும் அல்ல, ஒரு இடத்தின் பிரச்சினையும் அல்ல. மாறாக இது ஒட்டு மொத்த மக்களின் பிரச்சினை, முழு புத்தளம் பிரதேசத்தின் பிரச்சினை. அவ்வாறிருக்க ஒரு குறிப்பிட்ட தொகையினரே இவ் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.

அவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தவிடாது பலப்படுத்த முன்வரவேண்டிய அவசியாமாகும். இக் குப்பைக்கழிவுகள் எம்மை பாதிப்புக்குள்ளாகும் அதேநேரம் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிப்படைய செய்யக்கூடியது. இவைகளை நாம் இப்போதே நிறுத்தாவிட்டால் எமது சந்ததியினரின் தூற்றுதலுக்கு ஆளாகுவோம் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் அனைவரும் வேலைகள், குடும்பங்கள் இல்லாதவர்கள் என்றில்லை. அவர்களுக்கும் வேலைகள், பணிகள், குடும்பங்கள் இருக்கின்றன. அவைகளையும் செய்துக்கொண்டு சமூகநலனையும் கருத்திட்கொண்டே தமது நேர காலங்களை தியாகம் செய்கின்றனர்.

ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, அடம்பன்கொடியும் திரண்டால் தான் மிடுக்கு என்றவாறு அனைவரும் ஒருமித்து போராடுவோம். இவ் நாசகார திட்டத்திலிருந்து எமது புத்தளம் மண்ணை மீட்டெடுப்போம்.

இளைஞர்களே..! ஆண்களே..! பெண்களே..! இவ் சத்தியாகிரக போராட்டத்தை வழு சேர்க்க கைகோருங்கள். உங்கள் கால நேரங்களை கொஞ்சம் ஒதுக்கி கொழும்பு முகத்திடலுக்கு உங்கள் கால்களை நகர்த்துங்கள்.

எமது ஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்ட போகிறோம்..? நாம் வசிக்கும் மண்ணின் இருப்பை பாதுகாக்க எப்போது முன்னிற்க போகிறோம்.? காலம் தாழ்த்தாது எமக்காக, எமது சந்ததியினருக்காக எமது பங்களிப்பை நல்க தயாராகுவோம்.

நாளைய வெற்றியில் எமது பங்களிப்பும் இருக்கட்டும். இவ் அபாயத்தின் தன்மை பற்றி, இதன் பிரதிகூலங்கள் பற்றி அறியாதவர்களிடன், அவை பற்றிய தெளிவின்மை காணப்படுவோர்களிடம் தெரியப்படுத்துங்கள். மூலைமுடுக்கு எங்கும் இப்போராட்டத்தின் வீரியத்தை எடுத்து சொல்லி அவர்களையும் அழைத்து வாருங்கள்.

புத்தளம் – எமது வளம் – அழிவிலிருந்து பாதுகாப்பு..

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All