Puttalam Online
other-news

மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் அங்குரார்ப்பண நிகழ்வு

  • 6 October 2018
  • 138 views

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ரம்ய லங்கா ஆகியன இணைந்து முன்னெடுக்கும் ‘ மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்’ என்ற செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (புதன் கிழமை)  03.10.2018 பானந்துறையில் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள் கலந்து கொண்டு மர நடுகை செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

‘ மனிதன் இறைவனோடு தொடர்புடையவனாகவும், அடுத்த மனிதர்களை வேறுபாடுகளுக்கப்பால் ‘மனிதன், மனித நேயம்’ என்ற சிந்தனையில் நோக்குகின்ற நிலையை மேம்படுத்தல் செயல்பாட்டில் ஈடுபடவும் மற்றும் பூமியை வளப்படுத்தல் சுற்றுப்புறச் சூழலுடன் இறுக்கமான உறவை ஏற்படுத்தி அதனை அழகுபடுத்தல், ஒழுங்கு படுத்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்தவுமே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்’ என்று மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை  இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் எம். எச். எம். உஸைர் இஸ்லாஹி அவர்கள தெளிவு படுத்தினார்கள்.

அதே போன்று மரம் நடுதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் பெயரளவில் வந்துவிடாமல், அது நாட்டுப் பிரஜை ஒவ்வொருவரினதும் கடமை என்ற வகையில் உளத்தூய்மையாகவும் மனிதத்தை மதித்தும் இடம்பெறல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.

இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச் செயலாளர்களுள் ஒருவாரான சகோதரர் ஏ.ரீ.எம். நௌபல் அவர்களும் ரம்ய லங்கா பகுதியின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பானந்துறை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் எனும் நோக்கில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, ரம்ய லங்காவின் வருடாந்த வேலைத்திட்டத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான மர நடுகை வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All