Puttalam Online
ladies

அருவக்கல்லு குப்பைப் பிரச்சினையில் மாதர் எம் பங்கு

  • 8 October 2018
  • 451 views

women in protest

வடமேல் மாகாணத்தில் காணப்படும் புத்தளம் நகரமானது வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை எதிர்நோக்கியுள்ளது.

தற்போது அப்பிரதேசம் எதிர்கொண்டுள்ள சூழலியல் ஏய்ப்பு இப்பிரதேச மக்களை போராட்டத்தின் பால் ஒன்று திரட்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் சனத்தொகையில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இப்பிண்ணனியிலிருந்து சில விடயங்களை தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கொழும்பு முகத்திடலில் காற்றாட வரும் யாவரும் அங்கு அமைதி வழியில் போராடும் மக்கள் குழுவொன்றை காணலாம். அதில் பெண்களும் அடக்கம் என்பது கூடுதல் தகவல். நண்பர்கள் குழுக்களாகவும் உறவினர்களாகவும் களத்தில் நின்ற பெண்கள் புத்தளத்தின் அருமையான எதிர்காலத்துக்கு அறைகூவினார்கள்.

முடியுமானவர்கள் ஒலிவாங்கியை பெற்று தமது எதிர்ப்பை தெரிவித்ததும் மகிழ்ச்சியை தந்தது. இப்பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக ஏனைய மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும் பெண்களின் பங்கு கணிசமானது. புகைப்படங்களை பகிர்வதனூடும், தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு சேர்த்ததனூடும் இதனை மேற்கொண்டனர்.

இதேவேளையில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சிகளும் பழைய மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. இவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளை பெற்றதுடன் இப்போராட்டத்துக்கான ஆதரவையும் திரட்டினர். கருத்தாழம் பொதிந்த படங்களின் மூலம் சிறுவர்களுக்கும் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

களத்தில் நின்று இயங்கும் பெண்களின் செயற்பாடு இவ்வாறிருக்க, களத்திற்கு வருகை தரமுடியாதவர்கள் தங்கள் பிரார்த்தனைகளாலும் களத்தில் இயங்குபவர்களுக்கான அடிப்படை உதவிகளை செய்தும் இத்தார்மீக போராட்டத்தில் இணைந்துள்ளனர். இக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாரோ சொன்னது நினைவில் வருகிறது, “என் களம் முஸல்லா தான்!” எத்தகைய அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்!

இவ்வாறு எண்ணற்ற சேவைகளை செய்துவரும் புத்தளத்து பெண்களுக்கு hatsoff!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All