Puttalam Online
regional-news

பெண்கள் போராட்டத்திற்கான அழைப்பு..!

  • 8 October 2018
  • 713 views

இம்மண், பெண்கள் வீதியில் இறங்கி போராடியதை என்று கண்டிருக்கின்றது? பெண்கள் வீட்டின் கண்கள் என போற்றப்பட்டு அவர்கள் குடும்ப நிர்வாகத்திற்கான சகல பொருட்களும் சேவைகளும் வீட்டிற்கே அனுப்பப்படும் பாரம்பரிய வழக்கத்தை கொண்ட மண் இது.

இன்றைக்கு என்ன கறி ராத்தா என்றால், அவங்க மீன் வாங்கி அனுப்பி இருந்தாங்க… என பவ்யமாக தொடங்கும் பதில்கள் தாண்டி, இன்றைக்கு மீன்காரன் வரவில்லை, முட்டை தான் வாங்கி ஆக்கினேன் என்பது போய், market இல் மீன் தான் இருந்தது வாங்கி வந்தேன் trend ஆகியுள்ள காலமாயினும்… பெண்கள் என்று போராட்டத்திற்கென வீதிக்கு இறங்கினார்கள் என்ற கேள்வி, தொண்டையில் சிக்கிய முள்ளாய்..

தம் சந்ததிக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிள்ளைகளின் கல்வி விடயங்களை கவனிக்கவென எம் பெண்கள் முதலில் கூட்டங்கள், பாடசாலை நிகழ்வுகள் என படி இறங்கினர்.

இன்றும் அதே, ஆரோக்கியமான சூழலை, உறுதியான பொருளாதாரத்தை, தேகாரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முகமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

எதற்காக போராடுகின்றோம் என்று முற்று முழுதாக நாம் அறிந்திருக்கின்றோமா? நம்மிடம் மூன்றாவது ஒருவர் தொடுக்கும் வினாவுக்கு பதில்.அளிக்கும் வகையில் எம்மை உருவாக்கியுள்ளோமா? நம் பிள்ளைகள் விளங்கிக்கொள்ளும் வகையில் அவர்களை தயார்ப்படுத்த நாம் தயாரா என பல கேள்விகள் எம்முன் கடை விரிக்கப்பட்டுள்ளன.

போராட்டம் என்றால் அது உணர்வு மற்றும் அறிவு பூர்வமானதாக இருப்பது எம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். கூளம் வருமா, வராதா என்கிற கேள்விக்கு எப்போது ஆணித்தரமாக வராது என்று விடையிறுக்க எம்மால் முடிக்கின்றதோ, அன்றிலிருந்து வெற்றிக்கு மிகத்தூரமில்லை என நாம் நாட்களை எண்ணத் தொடங்கலாம்.

ஆக, மிக பணிவாய் நாம் வேண்டுவதெல்லாம், நாளை பெண்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பினவரும் நிகழ்வில், இதை வாசிக்கும் பெண்ணாகின் நீங்களும் மற்றும் ஆணாகின் உங்கள் மனைவி, சகோதரிகள், பிள்ளைகள், தாய் ஆகியோர் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி தான்.

பெண்ணினமே புறப்படு!!

புத்தளத்தில் கொட்டப்பட இருக்கும் வெளி மாவட்ட குப்பையினால் ஏற்படும் விஞ்ஞான , சமூக பாதிப்புகள் சம்பந்தமாகவும், இத்திட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் பெண்களின் பங்களிப்பு சம்பந்தாகவும் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது… புத்தளம் மீது அக்கறை கொண்ட அனைத்து பெண்களும் வாரீர்!!

காலம் :- 08.10.2018 திங்கள்
நேரம் :- மாலை 5.00- 7.00
இடம் :- நுஹுமான் மண்டபம்

Let’s stand together Ladies!!

Awareness and discussion program has been arranged for ladies. The protest that recently being hot *Aruwakkallu Garbage Issue* will be the topic of the evening.. The scientific and social effects of the project will be explain by the intellectuals.. So every Puttalam ladies should attend the program and let’s give your hands for the protest..

Date :- 08.10.2018 , Monday
Time :- 5 PM – 7 PM
Venue :- Nuhuman Reception Hall

Arranged by:- #CleanPuttalam Ladies Wings


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All