Puttalam Online
regional-news

ஓ மதிப்பிற்குரிய புத்தளமே!

  • 8 October 2018
  • 369 views

1990 கருப்பு ஒக்டோபர் மாதம் வடமாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் பலாத்கார வெளியேற்றம் செய்யப்பட்டபோது அதிகமானோர் அகதிகளாக அடைக்கலம் கண்ட பூமி புத்தளம் என்பதை நாம் மறக்க கூடாது. கடந்த மூன்று தசாப்தம் நெருங்கிய நிலையில் புத்தளத்தை தமது நிரந்தர வசிப்பிடமாக அதிகமானவர்கள் மாற்றி வாழ்வதையும் மறுக்க முடியாது. புத்தளம் வடபுல முஸ்லீம்களின் நேசத்துக்குரிய பூமி. மார்க்க மற்றும் கலாச்சார புரிந்துணர்வு காரணமாகவே புத்தளத்தை தஞ்சமடையும் பூமியாக தேர்வு செய்தோம்.

புத்தள மக்கள் அகதிகளாக வந்த எம்மை ஆதரித்தவிதம் நெகிழ்ச்சியானது. வந்தவர்களுக்கு உடனடி புகழிடம் கொடுக்க அங்கிருந்த பாடசாலையை திறந்துவிட சில சிக்கல்கள் வந்தபோது தனது கைத்துப்பாக்கி சகிதம் வந்து பாடசாலை gate இனை திறந்து பொறுப்புணர்வுடன் “உள்ளே செல்லுங்கள்!” என்று கூறிய அந்த அரசியல் வாதியின் தைரியம் மெய்சிலிர்க்க வைத்தது!

உடன்பாடுகள் முரண்பாடுகள் கலந்து நாம் புத்தளத்தில் வாழ்ந்தாலும் எமக்கு ஆதரவளித்து தலைநிமிரவைத்த புத்தளம் மண்ணிற்கும் மக்களுக்கும் மதிப்பளிக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே புத்தளத்தை குப்பை மேடாக்க துணிந்துவிட்ட அரசியல் அயோக்கிய தனத்திற்கு எதிராக சர்வதேச ரீதியிலும் நாம் குரல் கொடுப்பதும் பொறுப்புணர்ச்சி மிக்க எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதும் காலத்தின் கடமை. புத்தள மக்களின் போராட்டம் எமது போராட்டம் இந்த உம்மத்தின் போராட்டம் என்பதை மீள நினைவு படுத்திக்கொள்வோம்.

குப்பைகளை மிகச்சரியாக Recycle செய்யவேண்டிய பொறுப்பு அரசுடையது. கிராமப்புற கழிவுகளோ புத்தள சமூகத்தின் குப்பைகளோ இலங்கையை அசுத்தப்படுத்தவில்லை. மாறாக கண்மூடித்தனமாக நடந்து கொள்ளும் நகர்ப்புற கழிவுகளே இலங்கையை அதிகமாக அசுத்தம் செய்கிறது. இன்னொரு பக்கம் அந்த குப்பைகளை ஹம்பாந்தோட்டைக்கோ ஹபரனைக்கோ எடுத்துச் செல்லாமல் ஏன் புத்தளத்தை சீரழிக்க தேர்வு செய்தீர்கள்!? நாம் கூறவருவது மிகச் சிறந்த recycle system பற்றி அரசு சிந்திக்க வேண்டும். எமக்கு இன்னொரு மீதொட்டுமுல்லையும் வேண்டாம். அழகான இலங்கையின் எந்த ஊரையும் நாசப்படுத்தவும் வேண்டாம். சிந்திக்கவும் மாற்றுத் திட்டங்களுக்கும் நிறையவே வழியுண்டு.

#ஒரு_அகதியாக_அப்துர்_ரஹீம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All