நாட்டில் நிலவி வரும் அசாதாரண வானிலை காரணமாக அனர்த்ததுக்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இச்சூழ்நிலையில் அனர்த்த காலங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாமல் போகுமிடத்து பாடசாலை அதிபர்கள் குறித்த மாகாண அல்லது வலயக்கல்வி பணிப்பாளர்களிடம் அறிவித்தல் விடுத்து, உரிய தீர்மானத்துக்கு வருமாறு அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.