தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு உரிய குப்பைகளை இலங்கை நிலமீட்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பிடமிருந்து கொழும்பு மாநகர சபை பொறுப்பெடுக்க வேண்டுமென பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.
குப்பை முகாமைத்துவத்துக்காக பணப்பறிமுதல் செய்வதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனனாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போது, கொழும்பு மாநகர சபை தகுதியானவர்களாயின் தமது குப்பைகளை தாமே முகாமை செய்யட்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை மட்டுமன்றி எந்த உள்ளூராட்சி சபையும்- கடுவெல உட்பட இப்பொறுப்பை ஏற்க முடியும், தாம் என்றும் பொறுப்புகளை வழங்க பின்னிற்க மாட்டோம் என அமைச்சர் மேலும் கருத்து வெளியிட்டார்.
குப்பை மலைகளால் கொழும்பு பாதிக்கப்பட்ட போது நாமே பொறுப்பேற்று கொழும்பை குப்பைகளற்ற டெங்கு நோயற்ற நகரமாக மாற்றினோம். எவ்வாறாயினும், கொழும்பு மாநகர சபையிடம் குப்பை முகாமைத்துவம் தொடர்பான பொறிமுறை இருக்குமாயின் நாங்கள் அப்பொறுப்பை வழங்கத் தயார் எனவும் நேற்று அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்- டெய்லி நியூஸ்
Share the post "குப்பைகளை முகாமை செய்யுங்கள், அமைச்சர் கொழும்பு மாநகர சபைக்கு அழைப்பு"