Puttalam Online
regional-news

குப்பை திட்டத்திற்கு எதிரான  சர்வமத பிரார்த்தணையும் எதிர்ப்பு பேரணியும்

அருவக்காளு, சேராகுளிய பிரதேசத்தில் நாட்டின் குப்பை கூளம் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கழிவுகள், நச்சு பதார்த்தங்கள், அபாயகரமான கழிவுகளை தட்டும் திட்டத்துக்கு எதிரான பொது மக்களின் சுழற்சி முறையிலான சத்தியாகிறக போராட்டம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் நடைபெறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

புத்தளத்தை நாட்டின் குப்பை தொட்டியாக மாற்றும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான நிகழ்வாக சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் சர்வமத தலைமையோடு இணைந்து Clean Puttalam அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் புத்தளம் தொகுதி வாழ் அனைவரையும் நாளை வெள்ளிக்கிழமை 12/10/2018, பிற்பகல் 12.45 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து) கொழும்பு முகத்திடலுக்கு ஆக்ரோஷமான எதிர்ப்பு பதாகைகளுடன் வந்து போராடிட அழைக்கின்றோம்.

‘சந்ததி காக்கும் சரித்திர போராட்டம்’

பொறுத்தது போதும் வாரீர்…
குப்பையை எதிர்ப்போம்!!!
புத்தளம் மீட்போம்!!!

Clean Puttalam
சர்வமத தலைமைத்துவம்

WAK


One thought on “குப்பை திட்டத்திற்கு எதிரான  சர்வமத பிரார்த்தணையும் எதிர்ப்பு பேரணியும்

  1. Mohamed SR Nisthar says:

    ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியினரே! இது உங்களுக்கான அரிய சந்தர்ப்பம், தவறவிடாது உங்கள் அமைப்பின் பாதாகைகளுடன் கலந்து கொள்ளுங்கள்.

Leave a Reply to Mohamed SR Nisthar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All