Puttalam Online
other-news

கட்டுநாயக்க விமானநிலைய தொழுகை அறை தகவல் பொய்யானது

  • 12 October 2018
  • 464 views

(Zafar Ahamed – Bandaranaike International Airport)

பெரும் ஒப்பாரிச் சத்தத்துடன் ஒரு மாட்டுச் சாணப் பதிவு வாட்ஸ் அப் ,ஃபேஸ்புக் எங்கும் சுற்றிக் கொண்டிருக் கொண்டிருக்கிறது.அதாவது கட்டுநாயக்க விமானநிலையத்தில் முஸ்லிம்களின் தொழுகையறையை தொழுகைக்காகப் பாவிக்காது விடுகின்றபட்சத்தில் அந்த அறை வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்பட வாய்ப்புண்டு.ஆகவே மேலான பெரியோர்களே தாய்மார்களே சீமான்களே வைகோக்களே ..தொழுகையறையில் பத்து நிமிடமேனும் தாமதித்து….அதற்குப் பிறகு உரிமை ,சலுகை விடக்கூடாது..இப்படி…

நிறையப் பேர் என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள்.சிலர் குறிப்பிட்ட வாட்ஸ் அப் வள்ளுவர்கள் ஃபேஸ்புக்கில் பதிந்த போஸ்ட்டிலும் என்னை மென்ஷன் பண்ணி இருந்தனர்.நான் ஏர்போர்ட் மெனேஜர் எச்.எஸ் ஹெட்டியாராச்சியைத் தொடர்பு கொண்டு “அபாரமான கதை வசனம் எழுதிய ஒரு சீன் ஓடுகிறது ” என்று நடந்ததைச் சொன்னேன்.அவரும் கலவரமடைந்து ”இதை எல்லாம் யார் பரப்புகிறார்கள் ?” என்னைக் கேட்கிறார்..இதை எங்கே போய்ச் சொல்வது..

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்..ஊர்களில் பள்ளிகளில் ஐவேளை தொழுகை நேரங்களில் கூட்டம் சேர்வது போல இங்கே கூட்டம் சேர்வது இல்லை..விமானங்கள் வரும் நேர சூசிகளைப் பொறுத்தே மாறுபடுகிறது..சில நேரங்களில் தொழுகை அறைக்குள்ளே தொழ முடியாத அளவுக்கு பயங்கர சனம் அலைமோதும்.அப்படியான நேரத்தில் மக்கள் வெளியே தொழுவார்கள்..இந்தியாவில் கேரளா மாநிலத்தில் இருந்து உம்ரா செல்லும் க்ரூப் அடிக்கடி வரும்..அவர்களுக்கு எதுவுமே விளங்காது..எந்தளவுக்கு என்றால் ஒரு மார்க்க உபதேச நிகழ்ச்சி நடப்பது போல ஒருவர் தொழுகையறைக்கு வெளியே உரத்த குரலில் உபதேசம் செய்து கொண்டு இருப்பார்.டியுட்டி ப்ரீ ஷொப்பில் இருப்பவர்கள் ,வாடிக்கையாளர்கள் எல்லாம் கவனம் சிதறி இதைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்..யாரும் போய் சட்டைக் கொலரைப் பிடிப்பதில்லை..திட்டுவதில்லை..அதீத ஜனநாயக சுதந்திரத்தின் உச்சம் இது…

ஒரே ஒரு மைனஸ் என்ன என்றால் தொழுகையறை இருப்பது டிபார்ச்சரில் இடது மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய்..நிறைய கடைகள் முளைத்து இருப்பதால் தேடுவதற்குக் கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.ஆனால் யாரைக் கேட்டாலும் காட்டுவார்கள்..சிரமப்பட இது ஒன்றும் இன் ஒர்கானிக் கெமிஸ்ட்ரி அல்ல..

விமானநிலைய ஊழியர்கள், விமான சேவை நிறுவன ஊழியர்கள் இதர திணைக்களங்களில் வேலை செய்யும் அலுவலர்கள், பயணிகள் உட்பட குறைந்தது நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேராவது பயன்படுத்தும் குறிப்பாய் பாகிஸ்தான் இந்தியா பயணிகள் ஏதோ சொந்த நாட்டு தொழுகையறை போல பாவிக்கும் விமானநிலையத் தொழுகையறை பற்றி இப்படி ஒரு செக்குமாட்டு வதந்தி எப்படி அடித்துவிடப்பட்டது என்று புரியவில்லை.. “எவனோ ஒருவன் வாழ்க்கையில் முதல் தடவையாய் விமானப் பயணம் போகிறேன் பேர்வழி என்று வந்திருப்பான்.ஈடு இணை இல்லாத ஜோஸ் கேஸாய் இருக்கவும் கூடும்.. அந்நேரம் பார்த்து ஈ எறும்பு இருக்காது…’என் சமூகமே என்று மயங்கி ஸ்மார்ட் போனில் விழுந்து கண்டபடி கிளிக்கி சமூகக் கடமையைச் செய்திருப்பார்”… என்று ஊகித்துக் கொண்டேன்.என்னவொரு பிற்போக்குச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்…

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All