Puttalam Online
other-news

தெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

  • 17 October 2018
  • 120 views

(ரூஸி சனூன்  புத்தளம்)

பம்பலப்பிட்டி எமேசன் உயர்கல்வி நிறுவனத்தினால் “உன்னால் முடியும்”எனும் தொனிப்பொருளிலான இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று இடம்பெறவுள்ளது.

இந்த இலவச கருத்தரங்கு இம்மாதம் 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 முதல் 12 மணி வரை தெஹிவளை எஸ்.டீ.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் எவ்வாறு பட்டப்படிப்பை மேற்கொள்வது, வெளிநாட்டு புலமை பரிசில்களும், உயர்கல்வி ஆலோசனைகளும், 2025 ம் ஆண்டில் அதிகளவான தொழில் வாய்ப்புக்களை தரக்கூடியவைகள், சாதாரண தரங்களோடு எவ்வாறு ஓர் பட்டப்படிப்பை மேற்கொள்வது, வீட்டில் இருந்தவாரே தொலை தூரல் மூலம் கற்றலுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட இன்னும் பல விடயங்கள் இங்கு கலந்தாலோசிக்கப்படவுள்ளன.

கல்வி துறையிலே நீண்டகால அனுபவங்களுடைய உளவள ஆலோசகரும், அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.எச்.எம். இல்ஹாம் மரிக்கார் விசேட வளவாளராக கலந்து கொள்ள உள்ளார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All