Puttalam Online
social

புரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..!

-வசீம் அக்ரம்-

கொழும்பு குப்பைகளை புத்தளம் பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மக்களால் போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,

கொழும்பு மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கொழும்பு மக்கள் புத்தளம் மக்களுக்கு எதிரி அல்ல. புத்தளம் மக்கள் கொழும்பு மக்களுக்கு எதிரியுமல்ல. மாற்றமாக அரசின் தீமை பயக்கும் இத்திட்டத்திற்கு தான் நாங்கள் எதிரி.

கொழும்பு மீத்தொட்டுமுல்ல குப்பை மேட்டின் தீமைகளை, பிரதிகூலங்களை, அதனால் கொழும்பு மக்கள் பட்ட இன்னல்களை அறியாத கயவர்கள் அல்ல நாங்கள்.

இவ்வாறன தீங்கான செயற்றிட்டத்தால் இன்னொரு சமூகம் பாதிக்கப்பட்டாலும் நமக்கு எந்த கவலையும் இல்லை என்று ஒதுங்கும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் அல்ல நீங்கள்.

புரிகிறது, இதற்கான நிரந்தர தீர்வை வேண்டி போராடும் புத்தளம் மக்களின் போராட்டத்தில் வெற்றி நிச்சயம் கிட்டும்.

கொழும்பிற்கு வரும் வெளிமாவட்ட மக்களால் தான் இத்தனை குப்பைகள் என்று சொல்லும் மடையர்கள் மன்னிக்க வேண்டும் அரசியல்வாதிகளின் கருத்தை எப்படி ஏற்றுகொள்வது.? புத்திசுயாதீனம் இல்லையோ தெரியாது.

எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதிகள் தலைநகரை தாண்டி அந்தந்த மாவட்டங்களிலேயே இருந்தால் நாம் ஏன் கொழும்பு வர வேண்டும்.?

கொழும்பு மக்கள் புத்தளம் மக்களுக்கு எதிரி அல்ல. புத்தளம் மக்கள் கொழும்பு மக்களுக்கு எதிரியுமல்ல. மாற்றமாக அரசின் தீமை பயக்கும் இத்திட்டத்திற்கு தான் நாங்கள் எதிரி.

WAK


One thought on “புரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..!

  1. Mohamed SR Nisthar says:

    கொழும்புக்கு சென்று திரும்பும் அனேகமாக ஒவ்வொருவரும் கொழும்பில் இருந்துதான் குப்பையை உண்டாக்கும் ஏதாவது ஒரு பொருளை தத்தம் ஊர்களுக்கு கொண்டு வருகின்றனர். ஆகவே அடிப்படையில் கொழும்புக்கு வந்து போவோர் கொழும்பின் குப்பைகளை எதோ ஒரு வகையில் குறைக்கின்றன என்பது என் நிலைப்பாடு. இதற்கு மேலதிகமாக கொழும்ம்பு குப்பபையின் ஒரு பகுதியை புத்தளம் ஏற்கலாம் என்ற புத்தளம் நகர சபை தீர்மானம் பிழையானது. ஆகவே கண்டிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All