Puttalam Online
current

புத்தளம் மக்கள் போராட்டத்திற்கு 31 நாட்கள்..! “சேறாக்குழி” முற்றுகைப் போராட்டமாகத் தொடர முடிவு..!!

  • 30 October 2018
  • 366 views

 

உணர்வுள்ள உடன்பிறப்புகளே..

புத்தளப்பிராந்தியம் வீதிக்குவந்து இன்றோடு 31 நாட்கள் முடிகிறது…
சொந்த நலன்களை, சோறு போடும் வேலையை, அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை தள்ளிவைத்த தாய் தந்தையரின் தியாகத்தில்
இந்த புரட்சிப் பூ சிவந்திருக்கிறது..!

தனது சகல நிறங்களையும், கசப்புகளையும் கழற்றிவிட்டு ஊரை வழிநடாத்தும் இளைஞர்களின் முதுகெலும்பில்
இந்தப்போராட்டம் இன்றுவரை நிமிர்ந்து நிற்கிறது..!

நான்கு இனங்கள் கைகோர்ப்பில்…!
எழுத்தாணிகள் எழுந்திருக்கிறது… வழக்குகள் கோட்டேறி இருக்கிறது… அமைச்சுக்கள் அதிர்ந்திருக்கிறது… பத்திரிகைகள் பக்கம் ஒதுக்கியிருக்கிறது… எமக்கு பதிலளிக்க அரசின் media conference கள் நடந்திருக்கிறது…
முதல் முதலாய் புத்தளத்தின் துயர் நோக்கி இலங்கையின் முகம் திரும்பியிருக்கிறது…

உணர்வுள்ள உடன்பிறப்புகளே… இந்நேரத்தில்,
நாட்டின் அரசியல் அவலநிலையும், ஒரு மாத போராட்டத்தின் களைப்பும் உங்களை கண்ணயரச்செய்துவிட வேண்டாம்..!

எம் ஓய்வை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன… இடைவெளிகளில் வேலைகள் இரட்டிப்பாய் நடக்கின்றன…!
எங்களது குரல்மட்டுமே எதிரியை எரிக்கும்… எமது “எப்பா”.. “எப்பா”.. மட்டுமே அங்கு எதிரொலிக்கும்… உங்கள் சத்தியாகிரகம் மட்டுமே இந்த முயற்ச்சியை சாகாமல் பாதுகாக்கும்….!!

இரண்டாம் மாதம்… !
இந்த யுத்தம் இன்னொரு தளத்துக்கு தாவுகிறது..! இன்னும் பல அமைப்புகள் கைகோர்க்கிறது..! கருப்பு சிவப்பாகிறது..!!
எமது கடலுக்கும், குடிநீருக்கும், காற்றுக்கும் அரணாக நிற்பதற்கு உங்களுக்கும் உயர்ந்த சந்தர்ப்பங்கள் வருகிறது..!

ஒவ்வொரு நாளும் ஒரு நேரம் புரட்சிக்கு ஒதுக்குங்கள்…!
ஒவ்வொரு நாளும் ஒரு சப்தம் இந்த hut டிலே வந்து சொல்லிச் செல்லுங்கள்…!

ஒரு குடும்பத்திற்கு ஒரு நாள் | ஒரு கடைக்கு ஒரு நாள் | ஒரு கல்வி நிறுவனத்துக்கு ஒரு நாள் | ஒரு விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு நாள் |
தனக்கென்று ஒரு நாள்… கேட்டுப்பெருங்கள்…!! (0770599778)
இது உங்கள் வீடு… இது உங்கள் கடை.. இது உங்கள் சிரிக்கும் சிறார்களின் எதிர்காலம்..
மனது வையுங்கள்… !!

தியாகத்தின் சுவை… ஈடுபாட்டால் அன்றி, வெறும் பார்வைகளால் வராது..!

எதிர்பார்ப்புகளோடு…
#cleanputtalam
(DIRC சர்வமத அமைப்பு – புத்தளம் பெரிய பள்ளி – ஜம்இய்யத்துல் உலமா – மகளிர் அமைப்புகள்- தொண்டு நிறுவனங்கள் – Etc )

குறிப்பு :
விரைவில் எதிர்பாருங்கள்…
இலங்கையே திரும்பிப்பார்க்கவிருக்கும் “சேறாக்குழி” பல்முனை முற்றுகைப்போராட்டம் !!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All