Puttalam Online
social

“மன்னிப்பு” ஒரு போதும் குற்றமாகாது

  • 5 November 2018
  • 223 views

(புத்தளத்தில் இருந்து இஷாம் மரிக்கார்)
 .
மனிதன் என்ற வகையில் தவறு என்பது தவரிக்கமுடியாத காரணி என்பதை அறிந்து வைத்திருக்கும் நாம், “மன்னிப்பு” என்று வரும் போது அதனையும் ஒரு காரணியாக பார்ப்பது கிடையாது. என்னதான் தவறு செய்து மக்கள் வாயால் அடிவாங்கினாலும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த தவறு “மன்னிப்பு” வாங்காமலேயே மரணித்துவிடுகிறது. மறதி என்ற ஒரு விஷயம் மன்னிப்பு என்ற விடயத்தை நம்மிடம் இருந்து தூரப்படுத்திவிடுகிறது.
 .
இலங்கையின் வரலாற்றில் எத்தனையோ பேர் எத்தனையோ வரலாற்றுத்தவருகளை செய்து இருக்கிறார்கள், ஆனால் அந்த தவறை உணர்ந்து அடுத்துவரும் காலங்களில் அந்த தவறை மீண்டும் செய்யாமல் பயணித்ததால் அவர்கள் இலங்கை மக்களால் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அதே வரலாற்றில் அவர்களின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.
 .
மக்கள் விடுதலை முன்னணி என்ற அரசியல் கட்சியின் கருப்பு வரலாற்றில் மனிதத்தை ராப்பரோடு கலந்து சுட்டுப்பொசிக்கியது, 60 வயதுக்கு பின் இருப்பவர்கள் எல்லாம் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற நியதிகளை வகுத்து மனிதத்தின் நாடி நரம்புகளை கிழித்தது. இப்படிப்பட்ட கரை படிந்த வரலாற்றை கொண்ட JVP என்ற கட்சி இப்போது மக்கள் மத்தியில் எவ்வாறான நன்மதிப்பை பெற்றுள்ளது என்பதை மக்களின் மன்னிப்பு எமக்கு தெளிவாக சொல்கிறது.
 .
இலங்கையில் இருக்கும் மக்களுக்கு இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு நல்ல இதயம் மாநில அரசாட்சியில் இலவச கல்வி திட்டத்தை முன்வைத்த போது, அதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகர் என அழைக்கப்படும் டி.எஸ்.சேனநாயக அவர்கள் எதிராக பேசியபோதும், இன்று அவர் ஸ்தாபித்த கட்சி கல்வியின் அடிப்படையில் மக்கள் மத்தியில் வாக்கு வங்கியை தக்கவைத்திருப்பது மக்களின் மன்னிப்பை மாசுபடுத்தாமல் காட்சிப்படுத்துகிறது.
 .
மக்கள் மன்னித்த சந்தர்ப்பங்கள் ஆயிரங்களை நாம் உங்கள் முன் அடிக்கவைக்கலாம் ஆனால் இந்த மன்னிப்பை தலைவர்களும் கட்சிகளும் ஏன் செய்ய மறுக்கின்றது என்பது தான் எமக்குள் எழும் கேள்வி? என் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, எனக்கு எதிராக கட்சி ஆரம்பித்து, இன்று எனக்கு நிகராக இருக்க நீ யார்? என்னோடு போட்டிப்போட நீ யார்? உன்னை ஏற்க முடியாது, நீ செய்தவற்றை மன்னிக்க முடியாது என்றெல்லாம் பேசும் தலைவர்கள் நம்மில் இருக்கிறாகள் என்பதை நாம் அறியாமலில்லை.
 .
இனிமேலும் இதை நீங்கள் பேசுவதற்கும் நாம் அதை கேட்பதற்கும் தயாரில்லை, கடந்த கால தவறுகளை மன்னியுங்கள், நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றாக பயணியுங்கள், விடுக்கொடுப்புகள் இல்லாத கணவன் மனைவி ஒருபோதும் பிள்ளை பாக்கியத்தை அடையமுடியாது, அது போல தான் கட்சிகளுக்குள் அல்லது தலைவர்களுக்குள் விட்டுக்கொடுப்புகள் மலராவிட்டால் நிச்சயம் ஒற்றுமை என்ற ஒன்று உருவாகப்போவதில்லை.
 .
நீங்கள் எந்தக் கட்சியிலும் இருங்கள், நீங்கள் எந்த கொள்கையிலும் இருங்கள், இந்த கொள்கை கட்சி எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக அன்றி வேறு எதற்காகவும் அல்ல. ஆனால் இன்று “மக்களின் நலன்” எங்கோ ஒரு மூலையில் கிடப்பில் போடப்பட்டு, “கட்சியும் கொள்கையும்” தலைவர்களின் முக்கிய நோக்கமாக மாறி இருக்கிறது.
 .
சரியான சந்தர்ப்பங்களில் சரியான முடிவுகள் மக்கள் நலனுக்காக எடுக்கப்பட வேண்டுமே ஒழிய, அடுத்த தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவோ அல்லது அமைச்சுப்பதவிகளுக்காகவே அல்லது மக்கள் ஏசுவார்கள் என்பதற்காகவோ அல்லது கொள்கைக்கு முரண் என்பதற்காகவோ, அல்லது மரியாதைக்காகவோ முடிவுகள் எடுக்கப்படக்கூடாது. மக்கள் நலன் மட்டுமே முடிவுகளில் தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை நாம் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
 .
ஆகவே மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, கடந்த கால தவறுகளை மன்னித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தாழ்மையோடும் தோழமையோடும் அனைத்து கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறோம்.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All