Puttalam Online
regional-news

புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று௯டலும், புதிய நிர்வாகத் தெரிவும்

  • 6 November 2018
  • 87 views

புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று௯டலும், புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) புத்தளம் Ice Talk மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.முஸப்பிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, ஒன்றியத்தினால் அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் புத்தளம் தெற்கு, வடக்கு மற்றும் கற்பிட்டி ஆகிய கோட்டக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடகக் கழகங்களை உருவாக்குவது, க.பொ.த சாதாரண, உயர் தர மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்துதல், வரிய மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களை வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து, புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக எம்.எஸ்.முஸப்பிர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக ரஸீன் ரஸ்மின், உப தலைவர்களாக எம்.யூ.எம். சனூன், எம்.ஏ.காஸிம், உப செயலாளராக எஸ்.எஸ்.எம். அஸார்தீன், பொருளாளராக எம்.என்.எம்.ஹிஜாஸ், அமைப்பாளராக எம்.எச்.ஹஸ்னி அஹமட் ஆகியோருடன் ஐவர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

 R. Rasmin


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All