Puttalam Online
ladies

தாய்மார்கள் கவனயீனத்தை குறைக்க வேண்டும்

  • 7 November 2018
  • 976 views

(HM Hanan Ahmed)

இன்று நான் தியேட்டருக்கு சென்றேன்.!

இது சர்கார் படம் பற்றி அல்ல, நான் சென்றது ஒபரேஷன் தியேட்டருக்கு (சத்திரசிகிச்சை கூடத்திற்கு) இந்துக்களின் விசேட நாளான தீபாவளி விடுமுறை நாள் இன்று. குறிப்பாக மலையக இந்துக்களே தீபாவளியை ஒரு முக்கிய விழாவாக கொண்டாடுவார்கள் என்று நேற்றுதான் அறியக்கிடைத்தது. சரி கதைக்கு வருகிறேன்.

கடந்த 3 வருடங்களில் இன்றுதான் operation theatre (OT) இல் இருந்து கவலையோடு வெளியே வந்த முதல் சந்தரப்பம். OT க்கு செல்வதும், operation களில் assisst செய்வதும் சிக்கலான விசேட சத்திர சிகிச்சைகளை பார்வையிடுவதும் எனக்கு பிடித்த செயல்கள். Gyn & Obs எனும் பெண்ணுறுப்புயியல் மற்றும் மகப்பேறு சம்பந்தமான வாட்டில் கடந்த ஒரு வாரமாக training. இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் 38 வாரங்களை பூர்த்தி செய்த கர்ப்பினித் தாய் ஒருவருக்கு Placenta Previa (Possible “Placenta Accreta”) எனும் ஒரு சிக்கலான நிலைமை காணப்பட்டதால் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பதற்காக தீர்மாணிக்கப்பட்டிருந்தது. இதை elective caesarean section என்பர். அதாவது ஏலவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சை. ஆகவே OT க்கு செல்ல தயாராகவே சென்றேன்.

ஆனால் வாட்டில் நிலைமை வேறாக இருந்தது. 33 வாரங்களை பூர்த்தி செய்த கர்ப்பினி ஒன்றை வாட் நேர்ஸும், மருத்துவச்சி (midwife)மாரும் மாறி மாறி பரிசோதித்து பார்த்துக் கொண்டிருந்தனர். என்னவென்று கேட்டதற்கு “பபா தகலனவா அடுய்” என்றார், அதாவது பிள்ளையின் அசைவு குறைந்துள்ளது என்பதாகும். பிள்ளையின் அசைவு என்பது மிக மகப்பேற்று மருக்துவத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாகும். அதை சரியாக கவணிக்கவேண்டும். தவறினால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளையின் அசைவே பிள்ளை உள்ளே நலமாக உள்ளதா என்பதை உடனடியாக காட்டக்கூடிய ஒரு indicator ஆகும். சாதரனமாக தாய் ஒருவர் குழந்தை துடிப்பதை குறித்து வைக்கும் படி கேட்கப்படுவார் அதற்காக MOH இல் அல்லது வாரட்டில் Kick Count Chart ஒன்றும் வழங்கப்படும். ஆனால் அதை பெரிதாக கவனத்தில் எடுத்து சரியாக குறிப்பதில்லை. வாட்டில் ஒரு நாளைக்கு ஆகக்குறைந்தது 3 தடவையாவது “குழந்தை அசைகிறதா.?” என்ற கேள்வி எல்லா தாய் மாரிடமும் கேட்கப்படும், அவ்வளவு முக்கியமானது குழந்தையின் அசைவு. இது இல்லாமல் Pinard எனும் குழல் போன்ற ஒரு கருவியாலும், CTG (Cardiotocography) எனும் Monitor ஊடாகவும் குழந்தையின் அசைவு மற்றும் இதயத்துடிப்பை கணிக்கலாம். இந்த 25 வயது கர்ப்பினி இரண்டு நாட்களிற்கு முன் வாட்டில் அட்மிட் ஆகிய காரணமும் அதுதான். காலையில் இருந்து குழந்தை துடிக்கவில்லை.!

உடனெ scan செய்து பாரத்தபோது, குழந்தை நன்றாக உள்ளது என்று டாக்டர் கூறினார். இருந்தும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் CTG மூலம் குழந்தையின் இதயத்துடிப்பை பரிசோதிக்குமாறு பணித்தார். அது அவ்வாறே நடக்க கர்ப்பினி தனக்கு காய்ச்சலும் இடுப்பு வலியும் இருப்பதாக சொன்னார். நேற்றிலிருந்து இவற்றிற்கான மருந்துகள் சரியாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

இன்று காலை இவ்வாறு குழந்தையின் அசைவு குறையவும் உடனே scan செய்யப்பட்டது. குழந்தையின் அசைவு கொஞ்சமும் இல்லை. Vaginal examination செய்ததில் குழந்தை பிறப்பதற்கு தயார். வழமையாக 40 வாரங்களில் குழந்தையை வெளியே தள்ளும் கர்பப்பை இன்று 33 வாரங்களிலேயே குழந்தையை வெளியே தள்ள தீர்மாணித்துவிட்டது. அதற்கு காரணமும் இருந்தது. குழந்தையின் மலம் தண்ணீர் குடம் எனும் amniotic fluid உடண் கலக்கிறது. தொடர்ந்து குழந்தைக்கு உள்ளே இருக்கமுடியாது.இதனாலேயே குழந்தை வெளியே வர தயார். ஆனால் இங்கே ஒரு பிரச்சனை உள்ளது. குழந்தை வழமைக்கு மாறாக தலைகீழாக உள்ளது. இதை breach presentation என்பர். குழந்தையின் தலை மேலேயும், கால் பகுதி கீழேயும் உள்ளது. சாதாரன முறையில் பிள்ளை பிறந்தால் கழுத்துநெறிப்பட்டு இறக்ககூடும். ஆகவே உடனே emergency (திடீர்) caesarean section செய்ய தீர்மாணிக்கப்பட்டது. அணைவரும் வேகமாக செயற்படத்தொடங்கினர். மிக வேகமாக. 4-5 நிமிடங்களில் எல்லாம் தயாராகிவிட்டது. Theatre இற்கு அறிவித்தாகிவிட்டது, அவசரத்தேவை ஏற்பட்டால் இரத்தம் பெற இரத்த வங்கி alert செய்யப்பட்டது. Anesthesia என்னும் நோயாளியை சத்திரசிகிச்சைக்காக மயக்கும் வைத்திய பிரிவுக்கு தகவல் கொடுத்து அதையும் தயார்படுத்தியாகிவிட்டது. மற்றைய புறத்தில் பிறக்கும் பிள்ளைக்கான அழகான ஆடையும் நோயாளியின் பொருட்களோடு சேர்க்கப்பட்டது. எல்லாம் தயாராகவே நோயாளி அவசர அவசரமாக theatre இற்கு கொண்டு செல்லப்பட்டார். நானும் பின்னாலேயே சென்றேன் கவலையுடன்.
சில நிமிடங்களில் முழுமையாக மயக்கிய நிலையில் அடிவயிற்றில் தோல் பிழக்கப்பட்டு கர்பப்பை வேளியே எடுக்கப்பட்டது. கர்பப்பையை பிழக்க தயார்.

வழமையாக கர்பப்பை வெட்டி திறக்கப்பட்டதும் குழந்தையை வெளியே இழுத்து எடுக்கவேண்டும். குழந்தை உடனே அழும். அல்ஹம்துலில்லாஹ் குழந்தை சுவாசிக்க ஆரம்பிக்கின்றது என்று அர்த்தம். இவ்வளவு நாளும் நசஞ்சுக்கொடி/சூல்வித்தகம் (Placenta) ஊடாக தாயின் குருதியில் இருந்து பெற்ற ஒக்சிஜன் மூலம் உயிர்வாழ்ந்த பிஞ்சு உலகுக்கு வந்த அடுத்த கணமே சுயமாக சுவாசிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் குழந்தையின் சுவாசப்பை அதற்கு தயாராக இல்லை. சுருங்கி இருக்கும் சுவாசப்பையை விரியச்செய்வதற்கே பிறந்த குழந்தை அழுகிறது. இது அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்று. இந்த விடயத்தை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க அவனை தவிர வேறு யாரால் முடியும்.?

கர்பப்பை வெட்டப்பட்டு குழந்தை வேளியே எடுக்கப்பட்டுவிட்டது, ஆனால் குழந்தையிடம் இருந்து ஒரு சிறு சத்தம் கூட இல்லை. குழந்தை அழவில்லை. எல்லாரும் பதருகிறார்கள். குழந்தையின் தோற்றம் வித்தியாசமாக உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது.
Intra Uterine Death (IUD), குழந்தை இறந்துவிட்டது.! காரணம் Uterine Sepsis. அதாவது கர்பப்பை கிறுமித்தொற்றுக்குள்ளாகியுள்ளது. அந்த கிறுமி குழந்தையையும் தாக்கியுள்ளது. உடனே குழந்தையை சுற்றி பிரேத அறைக்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இப்போது placenta வை அகற்றவேண்டும். வழமைக்குமாற்றமாக அகற்றுவதற்கு கடினமாக உள்ளது. அதிக அளவில் இரத்தம் வெளியாகிறது. உடனே பெரிய வைத்தியருக்கு (VOG)இற்கு அழைப்புவிடுக்கப்படுகிறது. உடனே வருகிறார், பார்க்கிறார். Placenta Increta, நஞ்சுக்கொடி வழமைக்கு அதிகமாக கர்பப்பையின் சுவரின் ஆழத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னவர் உடனே வேலையை தொடர்கிறார். கர்பப்பையை அகற்ற தயாராகிறார். கர்பப்பையை அகற்றினால் மட்டுமே தாயின் உயிரை காப்பாற்ற முடியும். வேறுவழியில்லை.

25 வயது தாய், முதல் குழந்தை, அதுவும் இறந்துவிட்டது, கர்பப்பையும் அகற்றப்பட்டுவிட்டது, இனி கர்ப்பம் தரிக்கவும் முடியாது. ஆனால் செய்யவழியில்லை. தாயின் உயிரையாவது காப்பாற்ற எடுத்தமுயற்சி வெற்றியளிக்கிறது. தாய் இந்துமதத்தை சேர்ந்தவர். பெருநாளான இன்று இப்படியான ஒரு நிலைமை ஏற்படுவது தாங்கமுடியாத ஒரு வலியை கொடுக்கும். தாய்க்கு மட்டுமல்ல கணவன், குடும்பம் என பலருக்கும் இது தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு நிகழ்வு.

இதில் தாயின் கவனயீம், மருத்துவத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத தொழில்நுட்பம், மொழிப்பிரச்சினை என பல காரணங்கள் இருந்தாலும் யாவும் படைத்தவனின் நாட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மருத்துவ விஞ்ஞானம் இன்னும் வளரவேண்டிய தேவையை உணர முடிகிறது.

இறுதியாக, இன்றைய தாய்மார்களிடம் கவனயீம் அதிகம். தனதும் குழந்தையினதும் உடல் நலத்திற்காக நேரம் செலவழிக்க தயார் இல்லை. MOH க்ளினிக் இற்கு செல்வதில்லை, அங்கே கொடுக்கப்படும் அறிவுருத்தல்களை கேட்டு ஒழுங்காக நடைமுறைபடுத்துவதில்லை. இலவசமாக கிடைக்கும் சேவையை பெற தயார் இல்லை. 1500 2000 கொடுத்து private இல் மருந்தெடுக்கவே முனைகிறார்கள். விளைவுகளுக்கு யார் பதில் சொல்வது.?

WAK

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All