Puttalam Online
regional-news

அல் முஹ்பாத் முன்பள்ளியின் கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

  • 7 November 2018
  • 332 views

ரூஸி சனூன்  புத்தளம் 
 .
புத்தளம் காஸிம் வீதியில் அமைந்துள்ள அல் முஹ்பாத் முன்பள்ளியின் 25 வது வருட நிறைவு, கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன புத்தளம் நகர மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
 .
முன்பள்ளி பொறுப்பாசிரியை லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டார்.
 .
முன்பள்ளியில் கல்வி பயிலும் 103 மாணவர்களும் பங்கேற்ற கலை கலாசார நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதோடு சகல மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 .
கடந்த 25 வருடங்கள் அல் முஹ்பாத் முன்பள்ளி கடந்து வந்த பாதையினை தெளிவு படுத்தி வெளியிடப்பட்ட வெள்ளிவிழா சஞ்சிகையின் முதல் பிரதியினை முன்பள்ளி பொறுப்பாசிரியை லரீபா சுஹைல், பிரதம அதிதியாக கலந்து கொண்ட புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிசுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.
 .
ஆசிரியைகளான ஏ.எப்.நஸ்லிபா, எஸ். சஸ்மீரா ரிபாத், ராமலிங்கம் வனிதா, ராமகிருஷ்ணன் நிலானி, ஆர்.ஏ. ப்ராபாசினி இனோகா ரணசிங்க ஆகியோர் மாணவர்களை நன்கு பயிற்றுவித்திருந்தனர்.
 .
WAK
 .

bty

bty

bty

bst

bty

bty

bty

bty

bty

bty

bty

bty

bty

bty

bty

bty

bst

bty

bty

bty

bty

bty

bdr


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All