Puttalam Online
paq-news-bulletin

கத்தாரில் பேணப்படும் புத்தளத்து பாரம்பரியம்

  • 8 November 2018
  • 213 views

(Media – PAQ)

கத்தாரை மையமாக வைத்து புத்தளத்திற்கு வெளியே இயங்கும் அமைப்புக்களில் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பும் (Puttalam Association Qatar – PAQ) ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

புத்தளம் சகோதரர்களிடம் சந்தாக்களை சேகரித்து அதனூடாக புத்தளத்தில் கல்வி, மருத்துவம், சமூகம் சார் என பரந்துபட்ட பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறன வரிசையில் கத்தாரிலும் தமது உறுப்பினர்களினது தேவைகள், கோரிக்கைகள் நலன் காப்பதில் முன்னின்று செயற்படுகிறது.

கத்தாரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றுதான் பெருநாள் ஒன்றுகூடலாகும். இவ்பெருநாள் ஒன்றுக்கூடல் கத்தாரின் காலநிலையினை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளின் இரண்டாம் நாளில் நடைபெற்று வருகிறது.

கடந்த 5 வருடங்களாக கத்தாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் ஹஜ் பெருநாள் ஒன்றுக்கூடல் புத்தளத்தின் பாரம்பரிய பெருநாள் விளையாட்டு போட்டிகளை நினைவில் நிறுத்துகிறது. ஒப்பிடும் போது மன அமைதி, புத்தளம் சகோதரர்கள் ஒன்றுகூடி விளையாட்டில் ஈடுபடும் போது கிடைக்கிறது.

புத்தளம் சகோதரர்கள் வருடத்தில் ஒருநாள் இவ்வாறன விளையாட்டு போட்டிகளில் மன நிறைவோடு, மகிழ்வோடு பங்குபற்றுவதில் PAQ ஆனந்தம் கொள்கிறது.

கத்தார் – PAQ – பெருநாள் ஒன்றுக்கூடல் – மன அமைதி – மகிழ்ச்சி..

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All