(PAQ Media)
புத்தளம் எல்லைக்கு அப்பால் கடல்கடந்து இயங்கும் அமைப்புக்களில் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பும் (Puttalam Association Qatar – PAQ) ஒன்றாகும். கத்தாரில் பணிபுரிபவர்களிடம் பெறப்படும் சதகா மூலம் இவ்வமைப்பு புத்தளம் நகரில் கல்வி, மருத்துவம், சமூகம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.
அந்தவகையில் அமைப்பின் அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட சதகா தொகையினை கொண்டு ஒக்டோபர் மாதம் கீழ்வரும் தேவைகளை நிறைவேற்ற முடியுமாக இருந்தது.
1. பாடசாலை செல்லும் மூன்று பெண்பிள்ளைகளை கொண்ட விதவை தாயொருவருக்கு சுயதொழிலை முன்னெடுத்து செல்வதற்காக வீட்டின் முன்னுள்ள கடையமைப்புக்கு புனர்நிர்மான உதவி வழங்கப்பட்டது.
2. வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைக்கு திருமணத்தின் நிமித்தம் தளபாட உதவி வழங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் அக்குடும்பம் பெரிதும் பயனடைந்தது.
3. விதவை தாயொருவருக்கு அத்தியாவசியமான வாழ்வாதார உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.
4. கத்தாரிற்கு வேலைநிமித்தம் வந்து விஸா சிக்கலில் மாட்டிக்கொண்ட சகோதரர் ஒருவருக்கு விஸா முடிந்து மேலதிகமான நாட்களுக்கான தண்டப்பணம் செலுத்தி அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப உதவி செய்யப்பட்டது.
5. நோயினால் பாதிக்கப்பட்ட மாணவரொருவருக்கு மருத்துவ தேவையினை பூர்த்தி பொருட்டு உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.
உழைப்பதோடு நிறுத்திவிடாது தம்மால் ஆன சிறுதொகை சதகா மூலம் தம் சகோதரர்களின் இத்தேவைகளை பூர்த்தி செய்ய உதவிய அமைப்பின் அங்கத்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
WAK