Puttalam Online
regional-news

அவசர வேண்டுகோளினை விடுக்கிறது புத்தளம் பெரிய பள்ளி

  • 13 November 2018
  • 1,333 views

(ரூஸி சனூன்  புத்தளம்) 
 .
கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பெய்து வரும் தொடரான மழை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடிய ஆபத்து உள்ளதால் உடனடியாக பொது மக்களை வீட்டுப்புற சூழலை சுத்தம் செய்யுமாறு புத்தளம் பெரிய பள்ளி பரிபாலன சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 .
கடந்த கால டெங்கின் தாக்கத்தினை கவனத்தில் கொண்டு பொது மக்கள் உடனடியாக துப்பரவாக்கப்படாத கூரை பீலிகள், வீடுகளுக்கு மேல் மற்றும் வீட்டினுள் உள்ள நீர் தாங்கிகள், பொலித்தீன், டயர்கள், பாவிக்கப்படாத கிணறுகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அல்லது சூழலில் இருந்து அழித்தவிடுமாறும் பெரிய பள்ளி நிர்வாகம் வேண்டிக்கொள்கிறது.
 .
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களை சிரமதான பணியில் சகலரையும் ஈடுபடுத்துவதோடு, வீடுகளில்  யாருக்காவது காய்ச்சல் நிலமைகள் ஏற்படுமாயின் தாமதிக்காது வைத்தியசாலையை நாடுமாறும் பெரிய பள்ளி நிர்வாகம் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All