Puttalam Online
other-news

பாராளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய் பொடி தாக்குதல்

  • 16 November 2018
  • 252 views

இன்று (16-11-2018) செங்கோலுடன் சபாநாயகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அக்கிராசனம் நோக்கி வந்தார். இதையடுத்து சபா பீடம் பெரும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.

அங்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வந்த பொலிஸார் மீது கதிரைகள் மற்றும் புத்தகங்களால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் பொலிஸார் காயத்திற்குள்ளாகினர். மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் காயத்திற்குள்ளாகினர்.

இருப்பினும் சபாநாயகர் பெரும் அமளிதுமளிக்கும் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிளகாய்த் தூள் கரைக்கப்பட்ட நீரால் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All