Puttalam Online
other-news

பேராதனை பல்கலைக்கழகத்தில் அல்-இன்ஷிராஹ் இதழ் வெளியீடு

  • 21 November 2018
  • 286 views

(ரூஸி சனூன்-புத்தளம்) 
.
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் அல்-இன்ஷிராஹ் இதழின் வெளியீட்டு வைபவம் அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் ஈ.ஓ.ஈ. பெரேரா அரங்கில் இனிதே நடந்தேறியது.
.
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது வருடந்தோரும் அல்-இன்ஷிராஹ் என்கின்ற இந்த இதழினைப் பிரசுரித்து வெளியிட்டு வருகின்றது. அவ்வரிசையில் இவ்வருடம் ஐ.எஸ்.எஸ்.என். தரச் சான்றிதழ் தாங்கி 62 வது பதிப்பாக இவ்விதழ் வெளியாகியுள்ளது.
.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் பீ. திஸ்ஸாநாயக கலந்து சிறப்பித்தார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் எம்.இஸட்.எம்.ரம்ஸி வரவேற்புரை நிகழ்த்தினார்.
.
அல் இன்ஷிராஹ் இதழின் ஆசிரியரான எம்.ஜெ. துவான் காஸிம், இதழின் முதல் பிரதிகளை பேராசிரியர் உபுல் பீ. திஸ்ஸாநாயக, கலாநிதி எம்.இசட்.எம் நபீல் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் எம்.இஸட்.எம்.ரம்ஸி ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
.
அல் இன்ஷிராஹ் இதழில் எழுத்து மூல ஆக்கங்களான கட்டுரை, கவிதை, சிறுகதை மற்றும் அரபு எழுத்தணி மூலம் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவை தவிர சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கும், இதழாசிரியர் உட்பட இதழாக்கக் குழுவினருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
.
அரபு மற்றும் இஸ்லாமியக் கற்கைத் துறை விரிவுரையாளரான எஸ்.எம். தமீமினால், அல் இன்ஷிராஹ் இதழ் திறனாய்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் மற்றும் அனைத்துப் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All