Puttalam Online
paq-news-bulletin

PAQ அமைப்பின் நவம்பர் மாத சேவைகள்

  • 27 November 2018
  • 114 views

(PAQ Media)

புத்தளம் எல்லைக்கு அப்பால் கடல்கடந்து இயங்கும் அமைப்புக்களில் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பும் (Puttalam Association Qatar – PAQ) ஒன்றாகும். கத்தாரில் பணிபுரிபவர்களிடம் பெறப்படும் சதகா மூலம் இவ்வமைப்பு புத்தளம் நகரில் கல்வி, மருத்துவம், சமூகம் சார்ந்த தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.

அந்தவகையில் அமைப்பின் அங்கத்தவர்களால் வழங்கப்பட்ட சதகா தொகையினை கொண்டு நவம்பர் மாதம் கீழ்வரும் தேவைகளை நிறைவேற்ற முடியுமாக இருந்தது.

  1. புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் உரிய நேரத்தில் தொழுகையை பேணிக்கொள்வதற்காக பாடசாலையினுள் தொழுகை அறை புனர்நிர்மானத்திற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

 

  1. வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைக்கு திருமணத்தின் நிமித்தம் தளபாட உதவி வழங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் அக்குடும்பம் பெரிதும் பயனடைந்தது.

 

  1. மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்ட வறிய குடும்பத்தின் வீடு புனர்நிர்மானத்திற்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் அக்குடும்பம் மழையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றது.

உழைப்பதோடு நிறுத்திவிடாது தம்மால் ஆன சிறுதொகை சதகா மூலம் தம் சகோதரர்களின் இத்தேவைகளை பூர்த்தி செய்ய உதவியர்களுக்கு வல்ல இறைவன் நற்கூலியையும், உழைப்பில் பரக்கத்தையும் வழங்குவானாக.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All