Puttalam Online
regional-news

பாத்திமா கல்லூரி மாணவிகளின் முன்மாதிரிமிக்க செயற்பாடு

  • 2 December 2018
  • 355 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
 .
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒன்பதாம் தர மாணவிகள் இணைந்து வறுமைப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.
 .
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் ஏழ்மை நிலையில் கல்வியினை தொடரும் இனங்காணப்பட்ட 15 மாணவர்களுக்கு இவ்வாறு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
 .
செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் உதவி அதிபர் எஸ்.எல்.எம். முஸம்மிலின் வழிகாட்டலில் அண்மையில் (29) செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வைத்து பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒன்பதாம் தர மாணவிகளால் இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 .
தலா 1500 ரூபாய் பெறுமதி கொண்ட இந்த பாடசாலை உபகரணங்களை உள்ளடக்கிய பொதிகள், குறித்த ஒன்பதாம் தர மாணவிகள் தமது பெற்றார்கள் சிறு செலவுகளுக்காக தமக்கு வழங்கும் பணத்தை சேமித்து வைத்து கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All