Puttalam Online
regional-news

புத்தளத்தில் மேலதிக வகுப்புகளில் பொது விடுமுறை செயற்றிட்டம் அமுல்

  • 3 December 2018
  • 756 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
 .
கடந்த காலங்களில் பாடசாலை விடுமுறை காலத்தில் புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக மற்றும் தனியார் வகுப்புகளின் ஊர் பொது விடுமுறை செயற்றிட்டம் இம்முறையும் அமுல்படுத்தப்படவுள்ளது.
 .
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் புத்தளம் நகரில் சகல தனியார் வகுப்புக்களுக்கும் இம்முறையும் விடுமுறை வழங்கப்படவுள்ளன.
 .
கடந்த காலங்களில் இந்த செயட்திட்டத்தினை வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைத்த டியுட்டரி, தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள்; அனைவருக்கும் ஊர் தலைமைகள், உலமாக்கள், கல்வியலாளர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 .
மூன்றாம் தவணை விடுமுறையில் மாணவ சமுதாயத்தின் உள, உடல் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு டிசம்பர் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை புத்தளம் பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலை மேலதிக வகுப்புகள், தனியார், பிரத்தியேக வகுப்புகள், மக்தப் வகுப்புக்கள், வீடுகளில் நடைபெறும் சிறிய அளவிலான வகுப்புகளுக்கு முழுமையான விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 .
இக்காலப் பகுதியில் மாணவர்கள் விரும்பும் விளையாட்டுக்கள், சுற்றுலா, குடும்ப உறுவுகளை மேம்படுத்தல் மற்றும் சந்தோசமான நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் இஸ்லாத்துக்கு முரணான, மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஒழுக்க விழுமியங்கள் அற்ற விடயங்களிலிருந்து மாணவர்களின் பாடசாலை விடுமுறை காலத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள், பாதுகாவலர்களை வினையமாக வேண்டிக்கொண்டுள்ளது.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All