Puttalam Online
regional-news

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒளி விழா

  • 3 December 2018
  • 142 views

(க.மகாதேவன்)

புத்தளம் தெற்குக் கல்விக்  கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு பாடசாலை பிரதான மண்டபத்தில் ஒளிவிழா அதிபர் திரு.ந.பத்மானந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அருட் சகோதரியும் முன்னாள் கட்டைக்காடு றோ.க.தமிழ் மகா வித்தியாலய அதிபருமான. ஹெலன் லெம்பட், கட்டைக்காடு பங்குத்தந்தை ஏ.வின்சன் ஜெயராசா, ஆசிரியர் ஆலோசகரும் அருட்தந்தையுமான ஒகஸ்ரின் அமல்ராஜ் மற்றும் பாட இணைப்பாளர் திரு.வி.அருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர் களின் கரோல் கீதங்களும் அத்துடன் இயேசுபாலன் கூடுகளும் காட்சிப் படுத்தப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All