றிப்கான் கே.சமான்
புத்தளம் தில்லையடி, றத்மல்யாய , அல்ஹஸனாத் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் ஜமாஅத் அன்ஷாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க இஜ்திமா எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைமுதல் இரவு 9.00 மணிவரையில் அல்-ஹஸனாத் ஜும்மா பள்ளியில் இடம்பெற உள்ளது.
பிரபல பேச்சாளர் அஷ்ஷைஃக் எம்.எச்.அஹ்யார் (மதனி) தலைமையில் இடம்பெற உள்ள இந்த இஜ்திமாவில் ஜமாஅத் அன்ஷாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் தலைவரும்; தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் அதிபருமான அஷ்ஷைஃக் என்.பி.அபூபக்கர் சித்தீக் (மதனி) , அஷ்ஷைஃக் கலாநிதி எம்.எல்.முபாரக் (மதனி) , அஷ்ஷைஃக் கலாநிதி எம்.ஆர்.எம்.அம்ஜத் றாஸிக் (மதனி) மற்றும் உண்மை உதயம் இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அஷ்ஷைஃக் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆகிய பேச்சாளர்களால் மார்க்க உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன.
இந்த இஜ்திமாவில் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்புகளான சரியான கொள்கையில் பயணிப்போம் , ஹராமான பொருளீட்டலின் தீய விளைவுகள் , சுன்னாவின் முக்கியத்துவம் மற்றும் போதையும் இளைய சமூகமும் போன்ற தலைப்புகளில் முறையே மார்க உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன.
இந்த இஜ்திமாவில் பெண்களுக்கும் பிரத்தியேக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே மேற்படி இஜ்திமாவில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து பயன்பெற வருமாறு ஏற்பாட்டுக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.