Puttalam Online
other-news

வாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி

  • 6 December 2018
  • 116 views

சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘பெரும் லாபவெறியினால் சுற்றுச்சூழலை அழிக்கும் நாசகாரச் செயலுக்கு எதிரான சர்வதேச தினமான’ டிசம்பர் 8ம் திகதியன்று மாபெரும் வாகனப் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. சம்பூர் அனல்மின் நிலையத்துக்கெதிராக போராடி வெற்றிபெற்ற பசுமைத் திருமலை (Green Trincomalee) அமைப்பினர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி டிசம்பர் 8ம் திகதி சனிக்கிழமையன்று மாலை வெட்டுக்குளம் பகுதியிலிருந்து ஆரம்பித்து கொழும்புமுகத்திடல் வரை செல்ல ஏற்பாடாகியுள்ளது.

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமைக்கு எதிராக நீண்ட போராட்டங்களை மேற்கொண்டவர்களும் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிணங்களை எரியூட்டும் மயானங்களை அகற்றக்கோரி பாரிய மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து வெற்றிகண்டவர்களும், சமூக அநீதிகள், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராக பத்து வருடங்களுக்கு மேலாகப் பல்வேறு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுத்து வருகின்ற சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் மற்றும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாத்தளை, நுவரெலியா, கொழும்பு போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமூக போராளிகள் பலரும் Clean Puttalam அமைப்பின் முகாமிற்கு வந்து கலந்து கொள்ளவுள்ளனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All