Puttalam Online
current

சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் அடுத்த நிகழ்வு

  • 7 December 2018
  • 450 views

#Clean Puttalam#

சூழலை மாசுபடுத்தும் திண்மக்கழிவு திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக கையெழுத்து வேட்டை ஒன்று இன்றைய ஜும்மா தொழுகையை தொடர்ந்து அனைத்து பள்ளிவாசல்களிலும் இடம்பெறுகின்றது.

எனவே  ஜும்ஆத் தொழுகை நிறைவு செய்துவிட்டு செல்பவர்கள் பள்ளிவாயலில் முன்னால் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து இடும் பதிவில் தங்கள் கையெழுத்துகளை வைத்து விட்டு செல்லுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

அத்துடன்  நாளை  சனிக்கிழமை மாலை அசர் தொழுகையை தொடர்ந்து புத்தளம் வெட்டுக்குளம் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் வாகனப் பேரணியில் கலந்து கொள்வதோடு,சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலை அழிக்கும் நாசகார செயலுக்கு எதிரான சர்வதேச தினமான  டிசம்பர் 8 சனிக்கிழமை மாலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெறும் மாபெரும் ஒன்றுகூடலிலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இந்நிகழ்வில் சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்ற கிரீன் திருகோணமலை அமைப்பினர், மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலக்கப்பட்டமைக்காக போராடி வெற்றி பெற்றவர்கள்,  உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் போராளிகள் கலந்து கொள்ள உள்ளனர் எனவே புத்தளம் வாழ் மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

#Clean Puttalam## Clean Nation#


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All