Puttalam Online
regional-news

கல்பிட்டி தில்லையூர் பாடசாலை வரலாற்று சாதனையாளர்களுக்கான விருது

  • 8 December 2018
  • 258 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
கல்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2018 ம் ஆண்டு  புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா அண்மையில் தில்லையூர் அ.மு.வித்தியாலயத்தில் அதிபர் பாத்திமா றிஸ்வானா (ரெஜினா) தலைமையில் இடம் பெற்றது.
.
இந்நிகழ்வில் அதிதிகளாக கல்பிட்டி கோட்டக்  கல்விப் பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்னான்டோ, ஓய்வு பெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளர் எஸ். நூஹு லெப்பை, முன்னாள் தில்லையூர் பாடசாலை அதிபர் சுஹைப் (நவ்சாத்) ஆர்.சி. பாடசாலை அதிபர் சஹீலா, முகத்துவாரம் மு.வித்தியாலய அதிபர் ஹரமைன், கோட்டக் கல்வி காரியாலய அதிகாரி எஸ். இஸ்பா மற்றும் ஆங்கில ஆசிரியர் ஆலோசகர் இஸ்பான் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றார்கள், மாணவர்கள், ஊர் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
.
சாதனை பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள், மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
.
இதேவேளை இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாக ஆசிரியர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு இவ் வருடம் அகில இலங்கை மட்டத்தில் தமிழ் தினப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட தரம் நான்கில் கல்வி கற்கும் செய்னப் சாரா என்ற மாணவிக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.
.
1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையிலிருந்து வரலாற்றில் முதற் தடவையாக மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவித்த பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில், கல்பிட்டி கோட்ட மட்டத்தில் விகிதாசார அடிப்படையில் இப்பாடசாலை முதலிடத்தினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All