Puttalam Online
other-news

எளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம்

  • 10 December 2018
  • 278 views

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உஸ்தாத் மன்சூர் விடயத்தில் நல்ல முடிவுகளை எடுக்கும் எல்லோரதும் எதிர்பார்பாகும். அதில் உள்ள சில உலமாக்களை நான் அறிவேன். 2 வருடங்களுக்கு முன்னர் ஹலால் பிரச்சினை யின் போது சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதில் எழக்கூடிய பிரச்சினை கள் மாற்றுத்திட்டங்கள் ஷரீஆ சட்டங்களை மீறாத வழிகாட்டுதல்கள் பற்றி நாங்கள் பலர் அஸ்னா பள்ளியில் இஷாவுக்கு ப்பின்னர் பலமுறை சந்தித்து கலந்துரையாடி னோம்.

முஸம்மில் ஆலிம் உட்படப் பல உலமாக்களும் எமது திட்டங்களை வரவேற்ற தோடு ஷரிஆவில் பெறக் கூடிய மாற்றுவழி களை யும் விளக்கினர். எதிர்பார்த்த கைவிட முன்னேற்றமான கருத்துக்களைப் பேசினர் . இவ்வளவு தூரம் ஷரிஆவில் இலகுபடுத்தல்கள் உள்ளனவா என்று வியந்தேன். அதில் ஒரு அமர்வில் பள்ளி அழைப்பின் பேரில் உஸ்தாத்தும் அங்கு வந்ததிருந்தார். எதுவும் பேசவில்லை.

அந்த நேரத்து ஹலால்- உழ்ஹிய்யா உஷ்ணம் அவரில் வேலை செய்தி ருக்கவேண்டும் .சிறுபான்மை யினராக இனமோதலுக்கு மத்தியில் வாழும் மக்களின் உழ்ஹிய்யா – ஷரிஆ பற்றிப் பின்னர் அவர் சில கருத்துக்களை முன் வைத்தார். அதன் பின்னர் எமது கண்டி ஃபோரம் மாவனல்ல உடுநுவர மாத்தளை பள்ளிகளில் உழ்ஹிய்யாவை கையாளக் கூடிய ( குறிப்பாக சிங்கள மக்கள் அதிகம் வாழும் இடங்களில்)மாற்று முறைகளை அறிமுகம் செய்தோம் அதற்கு அக்குரண உலமா சபைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

இன்று ஒரு இக் கட்டான நிலை தோன்றி உள்ள து . மார்க்கத்தில் முன்னேற்ற மான கருத்து க்களை முன் வைப்பவரை – உஸ்தாத் மன்சூரை-சிறுபான்மை மக்கள் என்ற பார்வையில் மார்க்க த்திலிருந்து நலவான எளிதான விடயங்களை மக்களுக்கு சொல்பவரை அதைரியப்படுத்த வேண்டாம். உலமா சபையின் கவனத்திற்கு.

நன்றி..!

-கலாநிதி எம். எஸ். எம் அனஸ்-

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All