Puttalam Online
regional-news

புத்தளம் நகர சபை முன்னுதாரணம்; ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன்

  • 10 December 2018
  • 226 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
நகர சபையின் நிர்வாகம் ஒன்றினை எவ்வாறு சிறப்பாக வழி நடாத்த வேண்டும் என்பதற்கு புத்தளம் நகர சபை முன் உதாரணமாக திகழ்வதாக வடமேல் மாகாண ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன் தெரிவித்தார்.
.
புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில், புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸின் பூரண வழிகாட்டலில் நகர சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 42 முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான டைனி டொட்ஸ் வருடாந்த கலை சங்கமம் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுதனை பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
இந்நிகழ்வுகள் புத்தளம் கொழும்பு முகத்திடலில் சனிக்கிழமை (08) காலை நடைபெற்றது. நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமய தலைவர்கள், நகர சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட முன்பள்ளி மாணவர்கள் சகிதம் அவர்களது பெற்றார்களும் கலந்து சிறப்பித்தனர்.
.
42 முன்பள்ளி பாடசாலைகளின் 1400 மாணவர்களும் தமது கலை திறமைகளை வெளிக்காட்டும் விதத்தில் புத்தளம் நகர மண்டபத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த கலை சங்கம நிகழ்வுகள் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தன. 1400 மாணவர்களுக்கும் இதன்போது பரிசு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
.
வடமேல் மாகாண ஆளுநர் கே.சீ லோகேஸ்வரன் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
.
முன்பள்ளிகள் இன ஒற்றுமைக்கு வித்திடும் ஆரம்ப பள்ளி கூடமாக திகழ்கிறது. ஏனைய பிள்ளைகளோடு அல்லது ஏனைய மதங்களை சார்ந்த பிள்ளைகளோடு ஒற்றுமையாக கூடி வாழும் பழக்கத்தினை உண்டு பண்ணி இன ஒற்றுமைக்கு பக்க பலமாகவும் திகழ்கிறது.
.
வடமேல் மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் யாவுமே வடமேல் மாகாண சபையிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும் பதிவு செய்யப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் வழிகாட்டலில் இயங்குகின்றமை வரவேற்கத்தக்கதாகும் எனக்கூறினார்.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All