Puttalam Online
regional-news

வாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப் பேரணி

  • 10 December 2018
  • 373 views

வாழ்வுரிமையை வேண்டும் மாபெரும் வாகனப்பேரணி நேற்றைய முன்தினம் (08-12-2018) புத்தளம் நகர் சூழ முன்னெடுக்கப்பட்டது.

வெட்டுக்குளம் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி நகரின் உள்ளக வீதிகள் ஊடாக கொழும்பு முகத்திடலில் அமைந்துள்ள சத்தியாகிரக பந்தலுக்கு வருகை தந்தது.

சுற்றுச் சூழலை அழிக்கும் மாபியாக்களுக்கு எதிரான உலக போராட்ட தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த இப்பேரணியில் மக்கள் பலத்தை ஒன்றிணைத்து, சட்ட நடவடிக்கைகளால் சாம்பூர் அனல்மின் திட்டத்தை இடை நிறுத்திய, மணிப்பாய் பிரச்சினைக்கு தீர்வு தேடித் தந்த, களத்திலிருந்து போராடிய யாழ் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஊரின் நலன் காக்க ஒன்றுபடுவோம் – கை கோர்ப்போம் – மீட்டெடுப்போம்

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All