Puttalam Online
regional-news

தமிழ் சிங்கள இடது சாரிகள் குப்பை எதிர்ப்பில் பங்கேற்பு

  • 11 December 2018
  • 98 views

குப்பை கூள திட்டத்துக்கு எதிராக கடந்த சனிக்கிழமை மாலை முதல் நடைபெற்ற நிகழ்வுகளில் வடபுல, மலையக மற்றும் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் தமிழ் சிங்கள இடது சாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சமூக நீதிக்கான வெகுஜன மக்கள் இயக்கம், தேசிய மாக்சிச லெனினிச கட்சி, பெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் #CleanPuttalam ஏற்பாட்டு குழுவின் பிரதிநிதிகளோடு சட்ட நடவடிக்கைகள் மற்றும் போராட்ட வியூகங்களையும் கலந்துரையாடியனர்.

கலை கூத்து கலைஞர்களின் தாரை தப்பட்டை சத்தம் வான் கிழிய “எபா எபா…” கோஷங்களுடன் நகர் முழுதும் வாகன ஊர்வலம் வந்து கொழும்பு முகத்திடலில் போராட்ட நிக நிகழ்ந்தது.

உணர்ச்சிமிக்க போராட்ட பேருரைகளை பேசியும் புத்தளம் நகருக்கு வந்த பின்பு தாம் கட்டியமைத்த புரட்சிகரமான குப்பை பாடல்களை நேரடியாக இசையமைத்து பாடியும் புத்தளத்து குப்பை எதிர்ப்பு போராளிகளை உற்சாகபடுத்தினர்.

சாம்பூர் அனல்மின்னை தடுத்த போராளிகள் , சுன்னாகம் தொழிற்சாலை கழிவுநீர் பிரச்சினைக்கு போராடியவர்கள், மலையக தோட்ட தொழிலாளர் 1000ரூபா சம்பள போராட்ட இயக்குனர்கள் ஆகியோர் நமது புத்தளம் மண்ணுக்காக போராட இணைந்தமைக்கு #CleanPuttalam மனமார்ந்த நன்றிகள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All