Puttalam Online
regional-news

புத்தளம் நகரமண்டபத்தில் சிறுவர்களுக்கான செயலமர்வு

  • 11 December 2018
  • 134 views

சிறுவர்களுக்கான முன்னேற்றம் தொடர்பிலான செயலமர்வு ஒன்று அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

FRIENDS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில் புத்தளம், கல்பிட்டி மற்றும் முந்தல் செயலக பிரிவுகளில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து 100 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை தொடரும் பொருட்டு பாடசாலைகள் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. N.H.M. சித்தரானந்த, கூடுதல் மாவட்டச் செயலாளர் திரு.ஹெ.எம்.எஸ்.பீ.ஹேரத், மதிப்பிற்குரிய புத்தியாகம சாந்திரத்ன தேரர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த நாணயக்கார, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் திருமதி எஸ்.பீ.வீரசேகர (புத்தளம் பிரிவு), பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

450 க்கும் அதிகமான கிராம உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 47 சிறுவர்கள் செயற்பாட்டாளர்கள் இதன் போது கெளரவிப்பு செய்யப்பட்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All