Puttalam Online
current

PAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண விநியோக நிகழ்வு

  • 15 December 2018
  • 505 views

சவுதி அரேபியாவில் வாழ்கின்ற புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்களின் அமைப்பான Puttalam Association of Kingdom of Saudi Arabiaவின்புதிய வேலைத்திட்டமாக எதிர்வரும் வருடம் பாடசாலை செல்லவிருக்கும்மாணவர்களுக்கானஇலவசபாடசாலைஉபகரணங்கள் விநியோக நிகழ்வு விமர்சையாக அல்அஷ்ராக் முஸ்லிம் மஹா வித்தியாலயம் மணல்குன்று பாடசாலையில் வெகுவிமர்சையாக (15 12 2018) நடந்தேறியது.

இது எமது சமூகத்தின் பொருளாதார நிலையில் வளம்குன்றிய 120 மாணவர்களுக்கு அவர்களது கல்வி நடவடிக்கை கலை ஊக்குவிக்கு முகமாக இந்தப்பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் முகமாக புத்தளத்தைச்சேர்ந்த முக்கிய நலன்விரும்பிகளுடன் பிரதம அதிதிகளாக ஷேக் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் மற்றும் அல்ஹாஜ்M.M.ஜனாப் (புத்தளம்பெரியபள்ளிதலைவர்) கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

PAKSA அமைப்பினர் தொடர்ச்சியாக புத்தளம், புத்தளத்தை அண்டிய பிரதேசங்களில் கல்விசார்மேம்பாட்டுநடவடிக்கைகளில்இன்னோரன்னமுயற்சிகளில்ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு அங்கமாக இந்த பாடசாலை உபகரண வினியோக நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணை விட்டு நாடுகடந்து சென்றாலும் புத்தளத்து மைந்தர்கள் எமது ஊருக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நல்லமுயற்சிகளை நமது ஊருக்காக செய்வது எல்லோராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

இந்தமுயற்சிகள் paksa அங்த்தினர்களின் அர்ப்பணிப்புகளைவல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக எதிர்வரும் காலங்களில் இதுபோன்று கல்விமேம்பாட்டு முயற்சிகளுக்கு எமது சமூகத்தில் இருந்து பூரணஒத்துழைப்பு நல்கவேண்டும் என்பது எல்லோரினதும் அவா.

PAKSA அமைப்பினர் இவ்விழாவிற்கு உதவிகளை வழங்கிய சகல புத்தள சகோதரர்களுக்கும் வருகைதந்து சிறப்பித்த பொதுமக்களுக்கும் நன்றியைத்தெரிவிப்பதோடு, இப்பொதிகளைப் பெற்றமாணவர்களுக்கு அவர்களின் கல்விநடவடிக்கைகள் இனிதே வளரவாழ்த்துகின்றது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All